பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தடுக்கப்படாது நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இருகைகளும் தலைவனை முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவன போல்வதோர் குறிப்புடையளாதல். எ டு, ஒதியும் நுதலும் நீவி பான்றன் மாதர் மென்முலை வருடலிற் கலங்கி உள்ளத் துகுகள் போல அல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிடன் அறியாது மெலிந்திலன் ஆகி வலிந்துபொய்த் தொடுங்கவும் வாமெடுத் தனைத்தொறுக் தாமியைக் தெழுதலின் இம்மை யுலகத் தன்றியும் நம்மை நீளறி நெடுங்கண் பேதையொடு கேளரிக் தனகொல் இவள் வேய்மென் றோளே. என்று இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவன் தன்னிலையுரைத்த தாக வந்துள்ள இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில் இந்த கான்கு மெய்ப்பாடுகளும் வந்துள்ளமை அறிக. இங்ங்னம் மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டு மெய்ப்பாடுகளும் இயற்கைப்புணர்ச்சியாகிய முதற்கூட்டத்திற்கு முன்னே கிகழ்வனவாகும். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படுங்கால் தனது மனக்கருத்தினை காணும் நிறையுமாகிய குணங்களால் புறத்தார்க்குப் புலனாகாது மறைக்கும் கிகழ்ச்சி பெண்மையின் இயல்பாதலால் இவண் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெரும்பான்மை யும் தலைமகள்கண்ணே சிறந்து நிகழும் என்பர் பேராசிரியர். இனி வருவன புணர்ச்சிக்குப் பின்னும் களவு வெளிப்படுத் துணைபு முள்ள பின் மூன்று கூறுகளாகும். நான்காம் மெய்ப்பாடு : இது தோலாக் காதலின் நான்காம் கூறு பாடு உணர்த்துகின்றது. இதனை, பாராட் டெடுத்தல் மடந்தய வுரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே கான்கென மொழிப.8 என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். 7. மெய்ப். நூற் 17 பேரா.) 8 மெய்ப் நூற். 16 (இளம்.)