பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் (கற்பு) தொல்காப்பியர் கற்புக்குரியனவாகக கூறும் மெய்ப்பாடு: களையும் முதலில் உலகறிய இடையறவின்றி உடனுறை இன்ப மனையற வாழ்க்கை வேட்கையால் வரைவு வற்புறுத்தும் மெய்ப் பாடுகள் எனவும், அதன் பின் வரைந்து உடன் வாழும் திருந்திய கற்புக்குரிய மெய்ப்பாடுகள் எனவும் தனித்தனியாக இரண்டு பிரிவில் விரித்தோதுவர். - வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள் வரைந்து எப்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய பெய்ப்பாடுகள் இன்னின்னவை என்பதை, முட்டுவயித் கழறல் முனிவுமெய்க் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் துரதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம் என்ற நூற்பாவில் குறிப்பிடுவர். ஈண்டு அழிவில் கூட்டம் என்ற து வரைக்தெய்தும் கூட்டம். அஃதாவது, களவிற்போலப் பிறர்ககு மறைத்து இடையறவுபடுங் கரவுக் காதலைப் போலாது, உலகறிய ஒளியாது ஒழியாதுடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பாகும் இது. கூட்டம்’ என்பது, இங்குக் கூட்டம் தரும் வரைவு வேட்கைக் குறிப்பிற்காதலால் ஆகுபெயர். இக்கூறியவற்றுள், (1) முட்டுவயிற் கழறல் என்பது, களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடாகிய வழில் இடித்துரைத்தல். எ - டு. இரும்பிழிமாரி" என்ற அகப்பாட்டில் (அகம்-122) ங்ொச்சி வேலித் தித்தன் உறக்கதக் - கல்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றால் தோழிகங் களவே. 1. மெய்ப்-நூற். 23 (இளம்.)

  • நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை முதலியவற்றால் தலைவன் குறியிடத்து வருவதற்கு இடையீடுபடுதல்,