பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினைக்குரிய மெய்ப்பாடுகள் - (கற்பு) 3.05 என்ற கலிப்பாட்டடிகளில் (கலி. 78) பரத்தையர் சேரியிற் சென்று வந்த தலைவனோடு ஊடிய தலைவி தலைவனின் முயக்கம் உண்மையன்பு கொண்டது அன்று என்று கூறுதல் காண்க. (5) புணர்ந்துழி புண்மை என்பது, புணர்க்கவழி ஊடலுள் வழி மறைத்துக் கூறாது அவ்வழி மன நிகழ்ச்சியுண்மை கூறுதல். எ - டு. குளிரும் பருவத்தே யாயினும் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளிவிழாய் ஊடி யிருப்பினும் ஊர கறுமேனி கூடல் இனிதாம் எமக்கு என்ற ஐக்திணை ஐம்பதில் (செப். 30 தலைவி புணர்ந்துழி உண்மை கூறியமை அறிக. (6) பொழுது மறுப்பாக்கம் என்பது, களவின்கண் பகற் குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற் போல்வதேசச் வரையறையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கம் : எனவே, களவுக்காலத்துப்பொழுது வரைந்து பட்ட இடர்ப்பாட்டின் நீங்கிய மன மகிழ்ச்சி ஆக்கம் எனப்படும். எ - டு. அயிரை பரந்த அந்தண் பழனத்து ஏந்தெழின் மலர்ந்த தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுகர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து கடுங்க லானிர் தொழுதுகாண் பிறையிற் தோன்றிய துமக்கு அரியேம் ஆகிய காலைப் பெரிய கோன்றனின் கோகோ யானே. என்ற குறும்பாட்டில் (குறுங். 178) தொழுது காண் பிறையில் தோன்றின்ம் என்பது, களவுக்காலத்து இடையீடு பெருகிற்றெனக் கூறி, அங்ங்னம் வரைக்க பொழுதினை மறுத்த காலத்து கடுங்க லானிர் என்றமையின் இஃது அப்பொருட்டாயிற்து. (1) அருள்மிக உடைமை என்பது, களவுக்காலத்துப் போலத் துன்பமுற்றாற்போலன்றி அருள்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல். எ. டு, கின்ற சொல்லர் டுேதோறினியர் என்று மென்றோள் பிரிபறியலரே. என்ற நற்றிணைப் பாட்டில் (கற். 1) தலைவனது பிரிவையறிந்து கூறிய தோழிக்குத் தலைவி தன்னை வருந்தும்படி விட்டுப் தொல்.-20