பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、306 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பிரிகின்ற அன்னதொரு குணக்குறைபாடு தலைவனிடம் இல்லை என்று கூறுவதில் இம்மெய்ப்பாடு புலனாதல் காண்க. - (8) அன்புதொ.க கிற்றல் என்பது, களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேல் பெருகிய விருப்பினானே ஒருங்குத் தொக கிற்றல், w எ - இ. ..........பெருங்கல் Brடன் இனிய னாகலின் இனத்தின் இயன்ற இன்னா மையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே. என்ற குறும்பாட்டில் (குறுக்.288) தலைவி தலைவனுடன் அன்பு தொக கிற்றல் காண்க. - (9) பிரிவாற்றாமை என்பது, களவில் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுள் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை யின் தலைவன் பிரிவைத் தாங்காது அழுங்குதல். எ டு, இடனின்றி கிரந்தோர்க்கொன் நீயாமை விழிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் தடமென்றோள் பிரியாமை பொருளாயின் அல்லதை. என்ற தாழிசையில் (கலி 2) இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்பது. அதன் கருத்து : பிரிவாற்றாமையின் இவள் இறந்து படுவள் ; பின்னை அப்பொருள் கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையது எனத் தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழி கூறியவாறு. - (10) மறைந்தவையுரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி என்பது, தலைவனது மறைக்த ஒழுக்கத்தைப்பற்றி அயலார் கூறும் புறஞ்சொல்லின் தீமை குறித்து எழுந்த சொல் : அலச் ன - டு. நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்க் திசினால் வானே - அலர்கமங் தொழிகஇன் அழுங்க லுரே.