பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையணி 3 #5 மிக்க தண்டமிழ் வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரும் தமிழிற் பகைமை நீங்கி ஒன்று கூடி அரசவையில் வீற்றிருந்த தோற்றம் போல கிருத்தம் கீதம் வாத்தியம் என்னும் இம் மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும்வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி கூறப்பெறுவதால் இவ்வுவமை, சிறப்பினை நிலைக்கள மாகக் கொண்டு பிறந்ததாகும். "ஜவத் தன்ன இடனுடை வரைப்பின்" என்ற புறப்பாட்டடியில் (புறம்-251) சித்திரம் போலும் வனப் பமைத்த இடத்தினையுடைய ககரம் என்று அதன் செயற்கை கலம் தோன்ற உவமை கூறினமையின், இவ்வுவமை கலன் என்பதனை கிலைக்களeாகக்கொண்டு பிறந்தது என்பதனை அறிக. போவை பன்ன பலராப் மாண்கவின்’ என்ற அகப்பாட்டடியில் (அகம்-98) பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க, மாண்டமைந்த என் மகளது வனப்பு எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறிய தாகலின் இவ்வுவமையின் நிலைக்களம் காதல் என்பது அறிதறி பாலது. கண் போல்வான் ஒருவன் உளன் என்பதும் அது. 'அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின் இருமாவளவன்' என்ற பட்டினப்பாலை அடிகளில் (அடி 298-99) திருமாவளவ னாகிய கரிகாலனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறியதாகலின் இவ்வுவமையின் கிலைக்களம் வலி என்பது இனிது புலனாகும். இந்த கான்கனைத் தவிர ஆசிரியர் தொல்காப்பியனார், "கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்' என்ற நூற்பாவால் ஐக்தாவது நிலைக்களம் ஒன்றனையும் கூறுகின்தார். கிழக்கிடு பொருள் என்பது, கீழ்ப்படுக்கப்படும் பொருள் : அஃதாவது இழிவு தோன்றக் கூறப்பெறும் பொருள். "அரவுதுங்கு மதியின் துதலொளி கசப்ப" என்ற அகப்பாட்டடிகளில் (அகம்-313) பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலைமகளது துதலின் ஒளியிழந்த நிலையினைக் 7. உவம. - நூற். 5 (இளம்.)