பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. செய்யுளின் உறுப்புகள்-(1) பண்டைக் காலத்துத் தமிழறிஞர்கள் தாம் அறிந்த கருத்து களைச் செய்யுள்களிலேயே பொதிந்து வைத்தனர். இதனை நன்கு அறிந்த தொல் காப்பியர் செய்யுட்குரிய இலக்கணத்தைத் தமது நூலில் தொகுத்துாைக்கின்றார். இதனை யாப்பதிகாரம்’ என வேறோர் அதிகாசமாக்கிக் கூறுவாரும் உளர். இக்கருத்து பல அறிஞர்கட்கும் ஒப்ப முடிக் ததொன்று அன்று. அங்ங்ணம் கூறின் தொல்காப்பியத்திலுள்ள மரபியலை வழக்கதிகாரம் என்று வேறொன்று கூற வேண்டுமாதல் நேரிடும். அன்றியும், எழுத்தும் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி, அதிகாரம் ஒன்றுக்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் துரல் செய்த முறையோடு இது மாறுகொள்ளும் என்று கூறி அக்கருத்தினைப் பொருக்தாது என்று மறுத்திடுவர் பேராசிரியர்.” செய்யுளின் உறுப்புகள் : தொல்காப்பியர் செய்யுட்கு உரிய உறுப்புகளாக முப்பத்து 5ான்கனைக் குறிப்பிடுகின்றார். அவை : மாத்திரை, எழுத்தியல் வகை, அசை வகை, சீர், அடி, யாப்பு, மரபு, துரக்கு, தொடை வகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், பொருள்வகை, கூற்று வகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்ச வகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு என்னும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்று தொடர்நிலைச் செய்யுட்கு (காப்பியம்) உரியனவாகக் கூறப்பெறும் எட்டும் எனக் கூறுவர் தொல்காப்பியர். இவை தொல்காப்பியருக்கு முன்பிருந்த தொல்லாசிரியர்கள் வகுத்தவை. மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ யாத்த சீரே அடியாப் பெனாஅ மரபே துரக்கே தொடைவகை எனாஅ கோக்கே பாவே அளவியல் எனாஅ திணையே கைகோள் பொருள்வகை எனாஅ 1. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும வல்லாரைத்தலைப்பட்டுக்கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று வந்தார்".இறையனார்களவியல்பாயிர உரைப்பகுதி. - - 2, செய்யு. நூற்பா 1-இன் உ ை .