பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-(1) - 3.23. அசையையும் சீரையும் ஒசையொடு சேர்த்து வேறுபடுத்து உணர்த்துதல் செய்யுளிலக்கணத் துறைடோயினாரது நெறியாகும் என்பர் ஆசிரியர். அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல் வல்லோ ராறே." என்ற நூற்பாவினால் இதனையறியலாம். எனவே, பொருளுக் கேற்பச் சொற்களைப் பிரித்தவழித தளையும் சீரும் சிதையுமாயின் அவ்விடத்து ஒசையை கோக்கி அதன்படி சேர்த்தல் வேண்டும் என்பது கருத்து. எ - டு, மலர்மிசை யேகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். என்ற குறட்பாவில் (குறள்-3) வாழ்வார் என்பதனைப் பொருள் கோக்கி ஒரு சீராக்கின் ஒசை கெடும். அதன்கண் வாழ்? என்பதனைப் பிரித்து முதல் கின்ற சீரோடொட்ட ஒசை கெடாதாம். இங்கனம் பொருள் கோக்காது ஓசையே கோக்கிச் சீர் வகுக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் வகையுளி என வழங்குவர். வகையுளி - பிரிவுள்ளது. வகை. கூறுபாடு. அடியின் கண் அசையொடு சீர்களை இலயம்படுமாறு இசையறுத்துக் கூறுங்கால் மொழி சிதைந்து பிரிந்திசைப்பது வகையுளியாகும். 4. சீர் : அசைகள் இரண்டானும் சேர்ந்து ஒரோர் சொல் இல்யம்பட இசைத்து நிற்பது சீர் எனப்படும். இலயம் - முடிவு: ஒத்து முடிதல். சீர் - தாளம் : தாளவறுதி. பேராசிரியர், “உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசைபானும் மூவசைபானு மன்றி வாரா” என்று கூறி நாட்டுவர்."

  • தாமரை புரையுங் காமர் சேவடி’

என்ற குறுக்தொகையடியில் ஈரசையினாற் சீராகி நான்கு, சொல்லாகி ஒசையற்று நின்றவாறும், "எங்கன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை” 7. செய்யு. நூற். 10 (இளம்.) 8. ை நூற். 12-இன் உரை (பேரா.)