பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. பரந்து வருதலின் அரசத் தன்மையது. என்பதனான் ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின் அங்கிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத் தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன்பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண் மாந்தரியல சிற்றென வஞ்சிப்பாக் கூறினார். இவ்வாசிரியரும் பதினேழ் கிலத்தினும் வருதலானும் இனிய ஓசைத்தாகலானும் அடிப்பரப்பினாலும் ஆசிரியப்பா முற்கூறினார். அதன்பின் ஆசிரிய கடைத்தாகி இறுதியாசிரியத்தான் இறுதலின் வஞ்சிப்பாக் கூறினார்: இங்கிகர்த்தன்றி வேறுபட்ட ஒசைத்தாகலான் வெண்பா, அதன்பின் கூறினார்; அதன்பின் வெண்சீர் பயின்று வருதலானும் வெண்பா வுறுப்பாகி வருதலானும் கலிப்பாக் கூறினாரெனவறிக’ என்பர். - இவ்வாறு நான்கு வகையாக விரிந்த பாவினது பகுதியை உண்மைத் தன்மை நோக்கியுரைப்பின் ஆசிரியப்பா, வெண்பா என இரண்டாய் அடங்கும், அவற்றுள் ஆசிரியத்தின் கடையினை யுடையதாய் வஞ்சிப்பா அடங்கும். வெண்பாவின் நடையினை புடையதாய்க் கலிப்பா அடங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் பாவின் இலக்கணத்தைச் செப்புளியலில் 101 முதல் 149 முடியவுள்ள நூற்பாக்களால் விரித்தோதுவர். - மேற்கூறிய பாக்களால் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களை உணர்த்துவதாக நூல்கள் எழும். மக்களின் வாழ்க்கை இந்த மூன்றையுமே அடிப்படையாகக் கொண்டது : பொருளிட்டுதல், அறம் புரிதல், இன்பம் நுகர்தல். இவையே மக்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகும். இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் நல்ல வழிகளில் பொருளினை ஈட்டி, கல்லறம் புரிந்து, இன்பம் துய்த்து வாழ்வார்களாயின், அதுவே வானுறை வாழ்வாகும். இதுவே தொல்காப்பியரின் கருத்து. அக்கிலை மருங்கின் அறம்முத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப" என்பது அவர் கூறும் நூற்பா. உலகியற்பொருள் மூன்றனையும் கூறுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான். அவையின்றி வீடு பெறுமாறு வேறின்மையின் வீடும் ஆண்டுக் கூறினான். என்பது' என்ற பேராசிரியன் உரைப்பகுதியும் இதனை வலியுறுத்தும். இதனை வலியுறுத்தவே தெய்வப் புலமைத் 4. செய்யு. - நூற். 103, 104 (இளம்) 5. ை- நூற். 102 (இளம்)