பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவின் வகை 333. திருவள்ளுவரும் முப்பாலாகக் கூறி கெய்யுணர்த்தலான் வீடு பேற்றிற்கு நிமித்தம் கூறினார் என்பதும் ஈண்டு உணரத்தக்கது. *விடென்பது சிங்தையும் மொழியும் செல்ல கிலைமைத்தாகவின், துறவறமாகிய காரனவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்' என்று பரிமேலழகரும் இதனை விளக்கி புள்ளார். எனவே பழந்தமிழர் வீடு என்பதைப்பற்றிக் கவலைப் பட்டனர் என்று சொல்வதற்கில்லை. மேற்கூறிய மூன்று அறங் களையும் பின்பற்றும் ஒருவன் வீட்டினைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லையன்றோ? இனி, ஒவ்வொரு பாவினைப்பற்றி இலக்கணத்தையெல்லாம் விரிவாகக் காண்டோம். ,អ៊ីដ័បណ្ណ ஆசிரியப்பாவாவது, பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வரிச் சீரானும்ஆசிரியத்தளையானும் அகவலோசையானும் காற்சீரடி யானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது. இது சீரும் பொருளும் இசையும் துண்மையவாகப் பெற்று ஆசிரியர் அறிவித்தல் போலப் பொருள்களை அறிவித்து கிற்றலால் ஆசிரியப்பா எனப்பட்டது. இவ்வாசிரியப்பா அடிநிலை பாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பர் இளம்பூரணர். ஈற்றயலடி முச்சீரான் வருவதனை கேரிசையாசிரியம்’ என்பர். ஒர் ஆசிரியப்பாவில் இடையிடை முச்சீர் வரின் அது இணைக் குறளாசிரியம்’ என வழங்கப்பெதும். எல்லா அடியும் நாற்சீரடியாகி ஒத்து வருவது நிலைமண்டிலவாசிரியம்’ ஆகும். யாதனும் ஒாடியை முதலும் முடிவுமாக மாற்றி உச்சரித்தாலும் ஒசையும் பொருளும் வழுவாது எல்லா அடியும் ஒத்து வரும் பாட்டு அடிமறி மண்டிலவாசிரியம் என வழங்கப்பெறும். எனவே, ஆசிரியம் கான்கு வகைப்படும் என்றாயிற்று. இனி, முச்சீரடி முதலாக அறுசீரடி ஈறாக மயங்கிய ஆசிரியத் தினை அடி மயங்காசிரியம்’ என்று வழங்குவர். வெண்பா அடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியம்’ என்று பெயரிட்டு வழங்குவர். வஞ்சியடி மயங்கிய ஆசிரியம் வஞ்சியடி மயங்காசிரியம்" என்று உரைக்கப்படும். ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடியாகும் : சுருக்கத்திற்கு எல்லை மூன்றடியாகும். 6. திருக்குறள் - உரைப்பாயிரம்.