பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை முறைமையும் பிறழாமல் ஒரு துறையின்பாற்படச் செய்தல் துறை. பாகும் என்பது. அகத்திணையில் களவும் கற்பும் பற்றிய பாடல்களை மேற். கூறிய இலக்கண முறையால் உரைக்க வேண்டுமென்பது, தினையே கைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு பயனே கோளென் றாங்கப் பத்தே அகனைந் திணையும் உரைத்த லாறே.20 என்ற இறையனார் களவியல் நூற்பாவினாலும் அறியப்படும். இதில் தொல்காப்பியர் கூறியுள்ள செய்யுளுறுப்புகளுள் 13 முதல் 21 வரையுள்ள பகுதிகள் வந்துள்ளமை அறிக. இந் நூற்பா ஈற்றில் எஞ்சிகின்ற கோள்' என்பது பாட்டினகத்துப் பொருள் கொண்டு கிற்கும் நிலை. அஃதாவது, விற்பூட்டு, விதலையாப்பு, கொண்டு. கூட்டு, பாசிக்ேகு, ஒருசிறைகிலை என்னும் ஐந்து நிலைகளில் இன்னதோர் பொருள் கொண்டு கின்றது. இப்பாடல் என்பதாகும்.2 இங்கனம் திணைமுதல், கோள் ஈறாக வைத்து அகத்திணைப் பாடல்களை உரைத்தல் பண்டைய வழக்காகும். எடுத்துக்காட்டாக, அணியும் அமிழ்துமென் னாவியும் ஆயவன் தில்லைச்சிக்தர் மணியும்ப ராாறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே. 22 20. இறையனார் களவியல், நூற் - 56. 21. விற்பூட்டு என்பது, முதலுங் கடையும் பொருள் கொண்டு நிற்பது: விதலையாப்பு என்பது, தலையும் நடுவுங் கடையும் பொருள் கொண்டு நிற்பது: பாசிக்ேகு என்பது, சொற்றோறும் அடிதோறும் பொருளற்று கிற்பது கொண்டுகூட்டு என்பது, சொற்களைக்கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுமாறு: அறிந்து பொருள் கொள்ள நிற்பது ஒருசிறைகிலை என்பது, ஒரு. பாட்டிகைத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்பது” இறை. கள. நூற். 56 - இன் உரை. 22. திருக்கோவை. செப். 5.