பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·受00 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அருகி வழங்கிய மரபுகள் : ஆசிரியர் தொல்காப்பியர் தம் காலத்து அருகி வழங்கிய மரபுகள் சிலவற்றையும் குறிப்பிடு வர். அவை: - குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆனினைச் சேவல் என்றலும் இருள்சிறப் பன்றியை எனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த வழக்கின் உண்மையிற் கடிய லாகா கடனறிங் தோர்க்கே.21 என்ற நூற்பாவினால் அறியலாகும். இதனால் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தில் ஆண் குரங்கு கடுவன் எனவும், கூகை கோட்டான் எனவும், கிளி தத்தை எனவும், வெருகு பூசை எனவும், ஆண் குதிரை சேவல் எனவும், பன்றி ஏனம் எனவும், ஆணெருமை கண்டி எனவும் மருவி வழங்கின என்பது அறியப் படும். 'முடிய வந்த அவ்வழக் குண்மையிற் கடிய லாகா கடனறிக் தோர்க்கே’’’ எனக் கூறப்படுவதினின்று. இம்மரபுகள் தொல்காப்பியர் காலத்தே அமைக்கப்பெற்று ஆன்றோர் வழக்காயின என்பது புலனாகின்றது. இவற்றுள் குதிரைச் சேவல், எருமைக் கண்டி என்பவையொழிய, ஏனையவை இக்காலத்தும் வழங்கி வருகின்றன. மேலும், பெண்”, *ஆண்’, 'பிள்ளை' என்ற பெயர்களும் மேற்கூறியவாறு வழக்கினுள் கிலை பெற்றன என்று கூறுவர் ஆசிரியர். இந்த மூன்று பெயர் களும் பெண் வந்தது, ஆண் வந்தது, பிள்ளை வங்தது என்று கூறிய வழி அஃறிணைப் பொருள் என்பதை உணர்தல் அரிது : பெண் குரங்கு வந்தது, ஆண் குரங்கு வந்தது என்றே இவற்றை விதந்து கூறல் வேண்டும். பெண் பிறந்தது', 'ஆண் பிறந்தது", *பிள்ளை பிறந்தது’ என்று அடையடாது சொல்லிய வழி அவை உயர்திணைக்கேயா கும் என்பது ஈண்டு அறியத்தக்கது. 21. மரபி. நூற். 69 (இளம்.) 22. ை நூற். 51 இளம்.