பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் உலகம் ; இ. பேசுவர். இந்த இயல்புகளையெல்லாம் இரண்டாவதாகவுள்ள புறத்திணை இயல் ஒதுகின்றது. காதல் வாழ்க்கையை அகப்பொருள் நூலார் களவு என்றும், கற்பு என்றும் இரு கூறிட்டுப் பேசுவர். இரண்டிலும் களவே மிகவும் இன்பம் தரும் பகுதி. ஆகவே, மூன்றாவதாகக் களவியலையும் நான்காவதாகக் கற்பியலையும் தம் நூலில் தொல்காப்பியர் அமைத்துள்ளார். மேற்கூறிய அகம் புறம் பற்றிக் கூறாது ஒழிந்த சில செய்திகளையும் இனிச் சொல்லப் போகும் நான்கு இயல்களில் விடப்படும் செய்திகளையும் கூறுவது பொருளியல். தலைமக்களுடைய செயல்களின் அடிப் படைக் கருத்தையும் இப்பகுதி தெரிவிக்கின்றது. எனவே, பொருளியல் ஐந்தாவதாக வைக்கப்பெற்றுள்ளது. அக வாழ்க்கைக் கும் புற வாழ்க்கைக்கும் உயிராகவுள்ளது மெய்ப்பாடு. சிறப்பாக அஃது அக வாழ்க்கைக்குரிய மனத்தத்துவத்தைக் கூறுவதாக இருந்தாலும் பொதுவாக எல்லா மக்களிடையேயும் தோன்றும் உணர்ச்சிகளைப்பற்றியும் இவ்வியல் ஆராய்கிறது. ஆகவே, மெய்ப்பாட்டியலை ஆறாவதாக வைத்துள்ளார் ஆசிரியர். அன்றாட வாழ்க்கையில் வருவதைத்தான் கவிஞர்கள் உவமையாகச் செய்யுள்களில் கலைத்திறனுடன் எடுத்து ஆள்கின்றனர். எனவே, மெய்ப்பாட்டியலுக்கு அடுத்தபடியாக உவம இயல் ஏழாவதாக வைக்கப்பெற்றுள்ளது. வாழ்க்கையைக் கலைத்திறனுடன் வெளிப் படுத்தச் சாதகமாயிருப்பது கவிதை. உரைநடையில் கூறுவதைவிடச் செய்யுளில் கூறும் பொழுது வாழ்க்கை கலைத்திறனுடன் மிளிர்கின்றது. இத்தகைய செய்யுள் உறுப்புகளைப்பற்றிக் கூறும் செய்யுளியலை எட்டாவதாக வைத்துள்ளார் ஆசிரியர். மரபாக வழங்கி வரும் சொற்களைக் கையாண்டால்தான் கல்ல கவிதைகள் பிறக்கும் என்றும், அச்சொற்களை அம்மாபினின்றும் வழாதவாறு பாதுகாக்க வேண்டும் என்றும் கருதிய இலக்கண ஆசிரியர், அத்தகைய செய்திகளைக் கூறும் மரபியலை ஒன்பதாவதாக ஈற்றில் வைத்துள்ளார். எனவே, தொல்காப்பியப் பொருளதி காரம்-வாழ்க்கையைக் கூறும் கருத்துலகம்-அகத்திணையியல், புறத்திணையிடல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ம். பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது பகுதிகளாக உள்ளது என்பதை நாம் அறிதல் வேண்டும்.