பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல8:பபி பt காடமும் வ1ழககை ہ.مسمہ..ھی۔ வினைத்தல் மாத்திரையேயன்றி அப்போகம் வினை செய்தானைச் சென்றடையுமாறு செய்விக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே: உயிர்கட்கு இருவினைப் பயன் இறைவனது ஆணையால்தான் வரும் என்பது பெறப்படுகின்றது. இதுவே பாலது ஆணை’ ஆகும். இறைவன் இருவினையின் மாட்டுத் தன் ஆணையை வைத்து உயிர்கள் வினைப் பயன்களை நுகருமாறு: செப்வன். இதனால்தான் இறைவன் பால்வரை தெய்வம்" என்று: குறிப்பிடப்பெற்றான். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காதல் கொள்ளுவதற்குக் காரணம், ஊழ்வினையே என்று பண்டையோர் கம்பினர் ; ஊழ் வினைதான் அவர்களைச் சக்திக்கச் செய்கின்றது என்.அ கருதினர். • ஒன்றே வேறே என்று இரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப. 8 என்ற நூற்பாப் பகுதியினால் இதனை அறியலாம். ஒன்று: படுத்துவதும் வேறு.டுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப் படும் என்பதும், அவற்றுள் ஒன்றுவித்தலால் உயர்ந்த பாலின் வழி கிகழும் இறைவனது ஆணையால் உருவும் திருவும் முதலிய கலங் களால் ஒத்த தலைவனும் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பவே ரென்பதும் இதன் பொருளாகும். இதனையே வள்ளுவப் பெருக் தகை ஆகூழ், போகூழ் என்று குறிப்பிடுவர். இக்கூறியவற்றால் தொல்காப்பியர் காலத்தில் இன்றுள்ள எந்த வகைச் சமயங்களும் இல்லை என்பதும், திணைக்குரிய தெய்வக் கரு மட்டிலும் இருந்தது என்பதும், ஆயின், சமயங்கட்கு அடிப்படையான உயிர், உடல், ஊழ்வினைக் கொள்கை மட்டிலும் இருந்தன என்பதும் நாம் அறியும் உண்மைகளாகும். - முப்பொருள் உண்மை தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முன்னும் மக்கள் உலகம், உயிர், இறை என்ற முப்பொருள்களின் உண்மையை கன்கு அறிந்திருந்தனர்; இவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏற்ற மெய்யுணர்வு அவர்களிடம் அமைந்திருக்தது. இத்தகைய மெய்யுணர்வு பெற்றவர்கள்தாம் தவத்தைச் செவ்வனே செய்து 25. தொல் - சொல் - கிளவி - நூற். 58. 25. களவியல் - நூற். 2.