பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தி.இ.ஒ. -லின் அவற்றை "மன்னுயிர் என வழங்குதல் தமிழ் மரபு, இம்மாபினைத் தொல்காப்பியர் 'தொல்லுயிர் என வழங்குவர். "உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து என்றல் செவ்வன் இறையாம் என்பர் சேனாவரையர். இதனால், உணரும் தன்மையுடையது உயிர் என்பது பெற்றாம். உயிர்களது உடம்பின்கண் அமைந்த உறுப்புகளின் குறைவு மிகுதிகளுக்கேற்ப அவற்றின் உணர்ச்சி, வாயில்கள் வேறுபடுவனவாகும், இவ்வுலகத்து உயிர்களை ஒசறிவுடையன முதல் ஆசறிவுடையன வரையில் அறுவகையாக ப் பகுக்கப்பெற்றிருந்ததைத் தொல் காப்பியம் குறிக்கின்றது. இதன்ை, - ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே கான்கறி வதுவே அவற்றொடு கன்னே இக்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் இனரே.30 என்ற நூற்பாவால் அறியலாகும். சிற்றறிவுடைய உயிர்கள் தீவினைக்கு எதுவான மலத்தால் மறைப்புண்டு கிடக் து: இறைவனது அருளால் பிறவிக்கு வருகின்றன. ங்கனம் வருங்கால் முதலில் தொடுதல் உணர்வு தோன்றுத ற்கு இ.ந்திரும் புல்லும் மரனுமாகப் பிதக்கின்றன ; அதன்பின் சிறி து அறிவு விளக்கம் பெற்றுத் தொடுகலுணர்வும் சுவையுணர்வும் கொண்ட கத்தை, கிளிஞ்சல் முதலியனவாய்ப் பிறக்கின்றன ; அதற்குப் பிறகு சிறிது அறிவு மிகுந்து அல்விரண்டோடு முக்குணர்வு தோன்று தற்கேற்ற கறையான், எறும்பு முதலியனவாகப் பிறவி எடுக்கின்றன ; அதன்பின் மேலும் அறிவு மிகுந்து இம்மூன்தோடு கண்ணறிவும் தோன்றுதற்கேற்ற கண்டு, தும்பி முதலியனவாகப் பிறக்கின்றன ; அதன் பிறகு இன்னும் அறிவு முதிரப்பெற்று அவற்றோடு செவியறிவும் புலனாதற்கேற்ற விலங்குகளும் மாக்களு மாகப் பிறக்கின்றன ; அதற்குப் பிறகு அறிவு விளக்கம் மிக விரிதலின் அவ்வைந்துடன் மன அறிவும் விளங்குதற்கேற்ற ஆறறிவுடைய மக்களாகப் பிறக்கின்றன. இதனை இக்கால அறிவியலறிஞர்கள் படிமுறை வளர்ச்சிக் கொள்கையில் ' அடக்குவர் : மூளை வளர்ச்சிக்கேற்றவாறு இங்கிலை ஏற்படும் 30. மரபியல் - நூற். 26 இளம்.) 31. படிமுறை வளர்ச்சிக் கொள்கை . Theory of evolution,