பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கிை. பொருட்டுத் தங்கிக் காலக்தாழ்ந்துவரினும் தல்ைவி அவன் பரத்தை விடு சென்றான் என்று படைத்து மொழிந்து ஊடுவதாகவும் கவிதைகள் ஆக்கப்பெறும். இப்பகுதிக்குப் பெரும்பொழுது எது. என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனவே, உரை பாசிரியர்கள் பெரும்பொழுது ஆறும் இதற்கு உரியவை என்றே குறிப்பிட்டனர். வைகறை, விடியல் என்ற சிறுபொழுதுகள் இரண்டும் இதற்கு உரியவை. வைகறை விடியல் மருதம்" என்பது தொல்காப்பியம். மேற்கூறியவாறு மருதத் திணைக்கு விளக்கம் கூறினர் இளம்பூரணர். மருதத்தினைபற்றிப் பாடுதலால் சிறப்புற்ற பெயருடையோர் இருவர் ; ஒருவர் மருதம் பாடிய இளங்கடுங்கோ , மற்றொருவர் மருதனிளங்ாகனார். கடல் சார்ந்த இடம் கெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமும். கெய்தல் கிலத்தில் பல கானற்சோலைகள் இருக்கும். புன்னை, தாழை, ஞாழல், கெய்தல், பனை முதலிய பல மரங்கள் அங்குச் செறிந்து காணப்பெறும். காரை, அன்றில், கொக்கு, கடற்காகம் முதலிய பறவைகள் அவற்றில் வாழும். காரை, கொக்கு, கடலிலுள்ள மீனைக் கொத்தி உண்ணும். கடல் அலை உயர்ந்து தாழ்தல், மிகுந்த துயரம் குறைந்தகாலை ஏற்படும் இரக்கத்தினை ஒத்திருத்தலால் அச்சூழ்நிலையைத் தலைவி கண்ணுறும்போது அவளிடம் இரக்க உணர்ச்சியைத் தோற்றுவிக்கும். இதற்குரிய சிறுபொழுது எற்பாடு ஆகையால், அங்கேரம் இவ்விரக்க உணர்ச்சியை மிகுதிப்படுத்திக் காட்டும். எற்பாடு, நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.4 என்பது தொல்காப்பியம். எற்பாடென்பது பகந்பொழுதின் பிற்கூறு. தொல்காப்பியர் இதற்கும் பெரும் பொழுது குறிப்பிட வில்லை. ஆனால், உரையாசிரியர்கள் பெரும்பொழுது ஆறனை பும் இதற்குரியனவாகக் கொண்டுள்ளனர். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கம். இவ்வைந்தும் மக்கள் கடைப்பிடித்து ஒழுகத் தக்கவை. இவ்வைந்து ஒழுக் கங்களையும், அவை இன்ன நிலத்திற்குரியவை என்பதையும், 3. அகத்திணை - நூற்பா 9, 4. அகத்தினை நூற்பா 10.