பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..42 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மேலேறுதல். கன்னிப்பெண் ஒருத்தியைக் காதலித்த ஒருவன், அவளைப் பெற இயலாதபோது, நாற்சந்தியில் மடலேறுவான், உடம்பெங்கும் கீறு பூசித் தன் கையால் எழுதிய காதலியின் ஒவியத்தைக் கையிலே பிடித்துக்கொண்டு, அதன் கண்ணே தன் கருத்தை நிறுத்தி, தன் உடம்பிற்கு கேரிடும் ஊறுகளைப் பொருட் படுத்தாது மடல் ஏறி நிற்பான். அந்நிலையில் அவனைக் காண் பவர்கள் சோதனை தரமுடியுமா என்று கேட்பர். அவன் அதற் கிசைக்து குதிரையை எழுப்பிப்பான். அப்போது பனங்கருக்குப் பட்ட அவன் உடலினின்றும் சுரக்கும் இரத்தம் வெண்ணிராகத் (சுக்கிலம்) தோன்றின் அவன் விரும்பின மாதினை அவனுக்கே மணம் செய்விப்பர். வெண்ணிர் தோன்றாது குருதியே தோன்றி னால் அவனை அவர்கள் தண்டிப்பர்.* இங்குக் காதலிக்குச் சிறிதும் அவன் மீது விருப்பம் இல்லாது இருக்குமானால், அது கைக்கிளை யாகும். அங்ங்னமன்றி, அவள் உடன்போக்கிற்கு இயலாமை கேரிடும்போதும், காதலின் விழைவு அளவுகடந்து இருக்கும் போதும் மடலேறுதற்குக் காரணமானால், அது பெருக்திணை யாகும். காதல் ஒவ்வாக்காலை நிகழும் வரைபாய்தல் முதலிய தற்கொலைச் செயல்களும் இதனுள் அடங்கும். வேறு பெருந்திணை நிகழ்ச்சிகள் : செவ்விய வாழ்க்கை கடத்துவதற்குரிய பருவமில்லாதார் கலந்து கடத்தும் வாழ்க்கையும் பொருந்தா இயல்புடையது. இதையே ஆசிரியர் இளமை தீர்திறம்" என்று குறிப்பிட்டார். இளம்பூரணர் இது மூவகைப்படும் என்று கூறுவர். முதுமைப் பருவம் எய்திய தலைமகன் இளமைப் பருவ முடைய கங்கையை மணத்தலும், அங்ங்னமே முதுமைப்பருவம் எய்திய தலைமகள் இளைஞனைத் திருமணம் புரிந்துகொள்ளலும், இவ்விருவரும் இளமைப்பருவம் நீங்கின. பிறகும் அறத்தின்மேல் மனத்தினைச் செலுத்தாது காமத்தின்மேல் கருத்தினைச் செலுத் தலும் ஆகியவையாகும் இவை. இம்மூன்றனையும் இன்று நாம் வாழ்க்கையில் காண்கின்றோம். பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத செல்வரும், முதல் மனைவியை இழந்தோரும் தாம் முதுமை எய்தினும் இரண்டாந்தாரமாக மணம்புரிந்துகொள்வதும், முதுமைப் பருவம் எய்திய ஒருத்தியும் கட்டிளங்காளை ஒருவனும் "கள்ள நட்புக்கொண்டிருத்தலும், பேரறிர்ை பெர்னாட் ஷா போன்ற வர்களும் இளமைப் பருவம் நீங்கின. பிறகும் திருமணம் புரிக் து கொள்வதும் இன்று நாம் கண்கூடாகக் காணும் நிகழ்ச்சிகளன்றோ? காதல் உணர்ச்சி மிகுதியாகும்போது தெளிவடையாது கலங்கும்

  • இஃது உடலியல் உண்மைக்குச் சிறிதும் ஒவ்வாது என்பது

உணரத்தக்கது.