உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö佥 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 'பாங்கற்கூட்டம் நிகழின் இடங்தலைப்பாடு நிகழாது. இடந்தலைப் பாடு கிகழின் பாங்கற்கூட்டம் நிகழாது’ என்று களவியல் உரைகாரர் கூறுவர். தலைவியை அவ்வளவு எளிதாகச் சந்திக்க முடியாது என்பது அவர் கருத்து. இதுவும் அடிக்கடி நிகழக்கூடியதன்று : கிகழவும் முடியாது. தலைவியுடன் நெருங்கிப் பழகக்கூடியதோழியின் துணையிருந்தால்தான் இக்கூட்டம் அடிக்கடி நிகழ முடியும் என்று தலைமகன் எண்ணி, அவளை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுவான். இது தோழியிற் கூட்டம் என்று வழங்கப்பெறும். இக்த கான்கு பெரும்பிரிவுகளே, பல விகற்பங்களும் பகுதிகளும் உடையன வாக விரிந்து, ஒரு கதைபோல வந்து முடிகின்றன. இங்ங்ணம் முடியும் களவு வரலாற்றில் பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி,தலைவன்: தலைவி என்ற அறுவருமே கூற்று சிகழ்த்துவதற்கு உரியவர்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் பேசுவதற்கு உரியவர்களாக விதிக்கப்பெறவில்லை. இந்த கான்கு விதமான கூட்டங்களின் முழு விவரங்களைப்பற்றித் தொல்காப்பியம் கூறுகின்றது. திருக் கோவையார்’ என்ற நூலைப் படித்தால், களவியலின் பல்வேறு கிகழ்ச்சிகளையும் இலக்கியச் சான்றுகளுடன் அறியலாம். களவின் கால வரையறை இக்களவொழுக்கம் இத்துணைக் காலந்தான் நிகழும் என்று வரையறைப்படுத்தியுள்ளனர் இலக்கண நூலார், இரண்டு மாத காலக்தான் இது நிகழும் என்று இலக்கணம் கூறுகின்றது : நாடக வழக்காகக் கூறப்பெறும் இவ்வொழுக் கத்திற்கு மட்டுந்தான் இவ்வரையறை. உலகத்தில் நடைபெறும் ஒழுக்கத்திற்கு வரையறை இருத்தல் முடியாது. பதினோராண்டும் பத்துத் திங்களும் நிறைந்த தலைமகளைப் பதினைந்து பாண்டும் பத்துத் திங்களும் நிறைவு பெற்ற தலைமகன் சக்தித்துப் புணர்ந்ததாக அவர் கூறுவர். இரண்டு மாதகால களவில் ஒழுக, அவளும் பன்னிரண்டு யாண்டு கிறைவைப் பெறுவாள்; அவனுக்கும் பதினாறு பாண்டு முடிவு பெறும், பன்னிரண்டு பாண்டு மக்கட் பேற்றினுக்குரிய காலம் என்றும், பதினாறு யாண்டு ஆண்மை கிலை பெறுங் காலம் என்றும் அவர் உரைப்பர். இறையனார் களவியல் இதனை, களவினுள் தவிர்ச்சி வரைவின் கீட்டம் திங்கள் இரண்டின் அகமென மொழிப. . என்று கூறுவதைக் காண்க. அதன் உரையாசிரியரும், பதினோ ராண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகளோடும், பதினைந்து 14. நூற்பா-3 இன் உரை 15. இறையனார் களவியல்-நூற்பா 32