பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள் 65 யாண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகனைப் போலும் புணர்தல் வேண்டிற்றென்பது பெற்றாம். அவளும் இருதிங்கள் களவொழுக்கம் ஒழுகப் பன்னீராட்டைப் பிராயத்தாளாம். அது மக்கட்பேற்றுக்குக் காலம் : களவொழுக்கத்திற்குப் பொருந்தாதென விலக்கப்பட்டதாம் ஆசிரியரசன் என்பது. இவனும் இரு திங்கள் களவொழுக்கம் ஒழுகப் பதினாராட்டைப் பிராயத்தானாம். அஃது ஆண்மை நிலை பெறுங் காலமாகலாம் களவெழுக்கத்திற்கு விலக்கப்பட்டது என்பது” என்று உரைப்பது உளங்கொள்ளத் தக்கது. கற்பு இன்னதென்பது : இனி, கற்பொழுக்கத்தைப்பற்றிக் கூறுவோம். களவின்கண் கூடி இன்புற்ற காதலர்கள், பல்லோர் அறியத் திருமணம் புரிந்துகொண்டுதான் வாழ்க்கை கடத்த வேண்டும் என்பது பண்டைய தமிழர்களின் கொள்கை. களவொழுக் கத்திற்குப்பின் கட்டாயம் கற்பொழுக்கம் நடைபெற வேண்டும் என்பது அவர்கள் எண்ணம் : களவுடன் அவர்கள் சேர்க்கை கின்று விடக்கூடாது என்பது அவர்கள் கருத்து. ஆனால், தொல் காப்பியத்தை ஆழ்ந்து பயிலும் போது, ஒரு காலத்தில் ஆண் பெண் சேர்ந்து இல்வாழ்க்கை கடத்துதல் களவொழுக்கம் தொடங்கியே நடைபெற்றது என்று எண்ண வேண்டியுள்ளது. தலைவன் தலைவியரிடையேபொய்ச்சொல்லும், வழுவிய செயலும் ஏற்பட்ட பின்னரே சடங்கு என்னும் கட்டுப்பாட்டைக் குலத் தலைவர்கள் ஏற்படுத்தினர். இதனைத் தொல்காப்பியம், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்று கூறுகின்றது. எனவே, தொல்காப்பியர் காலத்திலேயே பொய்யும் புனை சுருட்டும் தோன்றிவிட்டன என்பது பெறப் படுகின்றது. பொய்யாவது, செய்த ஒன்றனைச் செய்திலேன் எனல் வழுவாவது, சொல்லுதலேயன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகுதல். கரணம் என்பது, வதுவைச் சடங்கு. கற்பு-தொல்காப்பியரின் கருத்து : கற்பு’ என்பதைப் பற்றித் தொலகாப்பியரும் கூறியுள்ளார். கற்பெனப் படுவது காணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே. 7 (கிழவன் - தலைவன் ; கிழத்தி - தலைவி1 16. கற்பியல்-நூற்பா 4 17. டிை நூற்பா ! தொல்.-5