இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
தொல்காப்பியம்-நன்னூல்
ஐ ஒடு கு இன் அது கண் னென்னும் அவ்வா றென்ப வேற்றுமை யுருபே. (தொல். 113, இது மேல் வேற்றுமையென்று சொல்லப் பட்டவற்றின் பெயரும் முறையும் தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்) வேற்றுமையுருபுகளாவன ஐ, ஒடு, கு. இன், அது, கண் என்று சொல்லப்படும் அவ் ஆறுருபும் என்று சொல்லுவர்
எ-து.
இவையாறும் அல்லாதெனவெல்லாம் அவ்வழியெனப் படும். அவை எழுவாய், விளி, உவமைத்தொகை, உம்மைத் தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினை யெச்சத்தொடர், இடைச்சொற் றொடர், உரிச்சொற்றொடர் என்பனவாம்.
வேற்றுமையும் அல்வழியும் இவையென விளக்கப்போந்த நன்னூலார்.
வேற்றுமை ஜம்முத லாறாம் அல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியி ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே. (நன். 152)
என்பதனால் வேற்றுமைப் புணர்ச்சியைத் தொல்காப்பியனார் கூறியவாறு ஆறாகப் பகுத்தும், அல்வழிப்புணர்ச்சியை வினைத் தொகை, பண்புத்தொகை, உவமத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என ஐந்து தொகைநிலையும், எழுவாய், விளி, பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, இடைச்சொற்றொடர், உரிச் சொற்றொடர், அடுக்கு என ஒன்பது தொகாநிலையும் எனப் பதினான்காகப் பகுத்தும் கூறினார்.
பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை யெட்டெனச் சொல்லதிகாரத்திற் கூறிய தொல்காப்பியனார், எழுவாய்க்கும் விளிக்கும் பெயரும் பெயரது விகாரமுமன்றி, வேறு உருபின்மையின் அவ்விரண்டினையும் நீக்கித் தமக்கென உருபுடைய இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை யிறாகவுள்ள ஆறையுமே இவ்வெழுத்ததிகாரத்து வேற்றுமை யாகக் கொண்டு அவ்வாறென்ப வேற்றுமையுருடே'யெனத் தொகுத்துரைத்தார். எனவே ஐ முதலிய ஆறுருபும் தொக்கும்