பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தொல்காப்பியம்-நன்னூல்



ஒற்றுமிகும் எனப் பொதுப்படக் கூறும் வழியெல்லாம் வந்தஒற்று மிகுதலையே சுட்டிச் செல்லுதல் ஆசிரியர் கருத்தாகும். வந்த ஒற்றுக்குக் கிளையான எழுத்து மிகுமாயின் அதனைக் கிளந்துரைத்தலும் அவரியல்பாம். தங்கண், நங்கண் என்புழித் தாம் நாம் என்பன தம் நம் எனக்குறுகி “மகரவிறுதி வேற்றுமை யாயின், துவரக்கெட்டு’ (புள்ளி-105 என்றபடி மகரங்கெட்டு, “படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக்கிளவியும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும், மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான” (புள்ளி-25) என்பதனால் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கன ஆகலான், அவை ஈண்டு அடங்கா.

   இனி, தங்கண், நங்கண் என்ற சொற்களை இடைச்சொற் சந்தி யெனக்கொண்டு வேற்றுமைக்குக் கூறிய மெல்லெழுத்து மிகுதி அதன்கண் அடங்காதெனக்கூறின், தங்கண், நங்கண் என்பன அல்வழியாயின் தம் நம் என்பனவற்றின்கண் வரும் இறுதி மகரம் அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும் (புள்ளி-19) என்பதனால் வருமெழுத்தின் கிளையெழுத்தாகத் திரிந்து நின்ற தெனக்கொள்வதன்றி வல்லெழுத்து முதலிய வேற்றுமையுரு பிற்கு ‘ஒல்வழியொற்றிடை மிகுதல் வேண்டும் என்னும் இச்சூத்திரத்தால் மெல்லெழுத்து மிக்கு நின்றதெனக் கொள்ளு தல் பொருந்தாது. உயிரீறும் இங்ஙனந்திரியுமியல்புடைய மகர வீறல்லா மெய்யீறும் ஆகியவற்றின் முன்வரும் கு கண் என்னும் உருபுகளின் முன் மெல்லெழுத்து மிகாமையும் நோக்கத் தக்கது.
   இனி, ஒல்வழி யென்றதனால் நம்பிகண், நங்கைகண் என இகர ஐகார வீற்றின்கண்ணும், தாய்கண், அரசர்கண், என யகர ரகர வீற்றின் கண்ணும் ஏழா முருபு வருமிடத்து ஒற்று மிகாமை கொள்க.
   ஆற னுருபின் அகரக் கிளவி 
   யீற ககரமுனைக் கெடுதல் வேண்டும். (தொல். 115)
   இஃது ஆறாவதற்குத் தொகைமரபினை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.
   (இ-ள்) அதுவென்னும் ஆறனுருபின்கண் நின்ற அகர மாகியவெழுத்து நெடுமுதல் குறுகுமொழிகட்கு “ஈறாகுயுள்ளி அகரமொடுநிலையும்” (எழுத்து-161) என விதித்ததனாலுளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதல் வேண்டும். எறு.