பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தொல்காப்பியம்-நன்னூல்



     குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி 
     மிகலுமாம் னளனல் வழிநத் திரியும். (நன்.158) 

என்ற குத்திரத்தின் முதல் இரண்டடியாற் கூறினார். இதன் கண் குற்றெழுத்தின் பின்னர் வரும் யகரவொற்று ஒரெழுத்தொரு மொழியான ஐகாரம், நொ, து என்பனவற்றின் முன்னர் வரும் ஞதமக்கள், பிற சொற்கள் முன் இயல்பாதலன்றி மிக்கு முடிதலும் ஆமென்பது கூறப்பட்டமை காண்க.

   மேற்கறிய ண எனல என்பவற்றின் முன் வரும் நகரமேயன்றித் தகரமும் திரியுமென்பது பின் (தொல்,எழுத்து 149,150 கூறப்படும்.
     அவற்றுள் 
     மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் 
     சொல்லிய தொடர்மொழி இறுதி யான. (தொல்.145)
   இது சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. -
   (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இரண்டிறந்து இசைக்கும். தொடர்மொழி பீற்றின்கண் மெல்லெழுத்து மிகாது இயல்பாதலே யன்றி, ஒருகால் இயல்பாயும், ஒருகால் மிகுந்தும் உறழ்ந்து முடியினும் நீக்கார் என்பதாம்.
   உம்மை எதிர்மறை உறழாமை வலியுடைத்து.

   (உ-ம் கதிர்ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி, துணி, முரி எனவரும்.
   வருமொழி முற்கூறியவதனால் பூஞெரி, பூஞ்ஞெரி, காய்ஞெரி, காய்ஞ்ஞெரி என ஒரெழுத்தொருமொழிகளுள்ளும் ஈரெழுத்தொருமொழிகளுள்ளும் சில உறழ்ச்சி பெற்று முடியுமெனவும், சொல்லிய என்றதனால் கைஞ்ஞெரித்தார், கைந்நீட்டினார் எனவும் மெய்ஞ்ஞானம், மெய்ம்மறந்தார் எனவும் அவ்விரு மொழிகளுள்ளுஞ் சிலமிக்கு முடியுமெனவும் கூறுவர் உரையாசிரியர். இவ்வுரையினைத் தழுவியே நன்னூலாரும்,
     குறில் வழி யத் தனி யைந் நொ து முன் மெலி 
     மிகலுமாம் (சூத். 158) 

என விதி கூறினார்.

     னனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் 
     வினையோ ரனைய என்மனார் புலவர்.   (தொல். :46)