உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருபியல் 153

   தெவ் என்பது உரிச்சொல் என்றும், உரிச்சொல்லாயினும் ஈண்டுப் படுத்தலோசையாற் பெயராக வைத்து உருபொடுபுணர விதி கூறப்பட்டதென்றும் இளம்பூரணருரையில் வரும் குறிப்பு பின்வந்தோர் சேர்த்ததாகும்.
     மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை. (தொல், 185) 
   இது மகரவீறு புணருமாறு கூறுகின்றது. இ-ள்) மகரமாகிய புள்ளியீற்றுச் சொல் முன்னர் வரும் சாரியை அத்துச் சாரியை எ-று.
   (உ-ம்) மரத்தை, மரத்தொடு, நுகத்தை, நுகத்தொடு என வரும்.
   அத்தே வற்றே (எழுத்து 133 என்பதனால் ஈற்று மகரமும், அத்தின் அகரம் அகரமுனையில்லை (எழுத்து 125 என்பதனால் சாரியையின் அகரமும் கெட்டுப் புணர்ந்தன.

இன்னிடை வருஉ மொழியுமா ருளவே. (தொல்.186)

   இஃது அவ்வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகிறது.
   (இ-ள்) மகரவீற்றுச் சொற்களுள் அத்துச் சாரியையே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள

எ-து.

   (உ-ம்) உருமினை, உருமினொடு, திருமினை, திருமினொடு எனவரும். மார்-அசை.
     நும்மென் இறுதி இயற்கை யாகும். (தொல்.187) 
   இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
   (இ-ள்) தும்மென்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும்.
   (உ-ம்) தும்மை, நும்மொடு, துமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும்.
   நும் என்பது இயற்கையாகிய மகரவீற்றுச் சொல்லென் பதும், (எழுத்து 325) அஃது அல்வழியில் நீயிர் எனத் திரியும் என்பதும் (எழுத்து 326) ஆசிரியர் கருத்தாகலின், நும்மென்னிறுதி என இதனை இயல்பீறாக வைத்து ஒதினார்.
     தாம்நாம் என்னும் மகர இறுதியும் 
     யாமென் இறுதியும் அதனோ ரன்ன