இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உருபியல் 161
இயல்பாயவழித் திசைப்பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னாலுரப்பட்ட மெய்யொடும் கெடும் எ-று.
(உ-ம்) வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின் கண், மேற்கின்கண் எனவும், வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் னவும் வரும். இன்பெறும்வழிக் குற்றியலுகரம் கெடாது நிற்றல் ‘குற்றியலுகரமு மற்றென மொழிப’ (எழுத்து 105 என்னுஞ் சூத்திரவுரையுள் விளக்கப்பட்டது ஆண்டுக் காண்க
கீழ்சார், கீழ்புடை, மேல்சார், மேல்புடை, தென்சார், தென்புடை, வடசார், வடபுடை என இவ்வாறு சாரியை பெறாது முடிவன வெல்லாம் ஆவயின் என்றதனால் இச் சூத்திரத்தில் தழுவிக் கொள்ளப்படும்.
புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம் தேருங் காலை உருபொடு சிவனிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. (தொல்.202)
இஃது இவ்வோத்தின் புறனடை,
(இ-ள்) புள்ளியிற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும் என முடிபு சொல்லியவை பல்லாத ஒழிந்தவை யெல்லாம் ஆராயுங் காலத்து உருபுகளோடு பொருந்திச் சாரியை நின்று முடியும் நியதியை யுடையவல்ல எ_று.
‘சாரியை நிலையுங்-கடப்பாடில’ எனவே அவை யெல்லாம் சாரியை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம்.
புள்ளியீற்றுள் சொல்லாது ஒழிந்தன னயரலள என்னும் ஐந்துமாம். உயிருள் இகரம் சொல்லாதொழிந்தது.
(உ-ம்) மண்+இன்+ஐ = மண்ணினை, மண்ணை வேய்+இன்+ஐ = வேயினை; வேயை.
நார்-இன்-ஐ = நாரினை, நாரை, கல்+இன்+ஐ = கல்லினை; கல்லை.
முள்+இன்+ஐ = முள்ளினை, முள்ளை; கிளி+இன்-ஐ : கிளியினை, கிளியை என வரும்.
இனித் தேருங்காலை என்றதனானே உருபுகள் நிலை மொழியாக நின்று தம்பொருளொடு புணரும்வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கையெல்லாம் ஈண்டு முடிப்பர் உரையாசிரியர்.
?T.12.