உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தொல்காப்பியம்-நன்னூல்



பானை ஒன்பானொடு என ஆன்சாரியை பெறுமென்றாராயிற்று.

   இங்ஙனம் இவ்வெண்ணுப் பெயர்கள் ஆன்சாரியை பெற்று முடிதலை,
     ஒன்று முதல்எட் டிறாம் எண்ணுளர் 
     பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல் 
     எல்லா மோடும் ஒன்பது மிற்றே. (நன்.249)

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார்.

     ‘ஆனிடை வரினும் என்ற எதிர்மறை உம்மையால், ஆன் சாரியை பெறாது ஒருபஃதனை, இருபஃதனை என இவ்வாறு வருதலுங் கொள்ளப்படும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.
     யாதென் இறுதியுஞ் சுட்டு முதலாகிய 
     ஆய்த இறுதியும் அன்னொடு சிவனும் 
     ஆய்தங் கெடுதல் ஆவயி னான. (தொல்.200) 

இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

(இ-ள்) யாது என வரும் குற்றுகர வீறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரவீறும் அன்சாரியையொடு பொருந்தும்; அவ்விடத்து ஆய்தங்கெடும் எ-து.

   சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரம் ஆய்தங் கெட்டு அன்சாரியை பெறும் என்பதனை,
     சுட்டின்முன் ஆய்தம் அன்வரிற் கெடுமே. (நன்.251) 

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

     ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் 
     சாரியைக் கிளவி இயற்கையு மாகும் 
     ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே. (தொல்.201) 
   இதுவும் குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபொடு முடிபு கூறுகின்றது.
   (இ-ள்) திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண்ணென் னுருபிற்கு முடிபு கூறுங்கால் முற்கூறிய இன்சாரியை யாகிய சொல் நின்று முடிதலேயன்றி இயல்பாயும் முடியும். அங்ஙனம்