இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
174
தொல்காப்பியம்-நன்னூல்
விசைங்கோடு " " "
ஞெமைங்கோடு " " "
நமைங் கோடு " " "
எனவரும். இங்ஙனம் வேற்றுமைக்கண் உயிரீற்று மரப்பெயர்கள் வல்லெழுத்து வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவதனை,
மரப்பெயர் முன்ன சினமெல் லெழுத்து வரப்பெறு நவுமுள வேற்றுமை வழியே. (நன்.186)
என்பதனாற் கூறினார் நன்னூலார். வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கும் வல்லெழுத்து மிக்கும் உறழ்வனவற்றை உணர்த்தக் கருதிய தொல்காப்பியர்,
யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே, (தொல்,229)
வல்லெழுத்து மிகினு மான மில்லை. (தொல்.230)
எனவரும் சூத்திரங்களால் ஆகார வீற்றுப் பெயராகிய யா, பிடா, தளா என்பன மெல்லெழுத்தோடு வல்லெழுத்துப்பெற்று உறழும் என்றார்.
(உ-ம்) யாஅங்கோடு, யாஅக்கோடு பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு தளாஅங்கோடு, தளாஅங்கோடு
என மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று வந்தன.
ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. (தொல்.245)
வல்லெழுத்து மிகினு மான மில்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான. (தொல்.246)
எனவரும் இரண்டு சூத்திரங்களால் இகரவீற்றுள் புளியென்னும் சுவையை யுணர்த்தும் பெயர் வல்லெழுத்து முதன்மொழி வரு மிடத்து மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று முடியு மென்றார்.
(உ-ம்) புளிங்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும்
புளிக்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும் வரும்.
ஒல்வழி யறிதல் என்றதனால் வல்லெழுத்து மிகுதல், புளிச் சாறு போல ஏனையவற்றிற்கு வழக்குப் பயிற்சி இல்லையென்பர் நச்சினார்க்கினியர்.
இங்ஙனம் சுவைப் புளிமுன் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து மிக்கு முடிதலை,