உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தொல்காப்பியம்-நன்னூல்



வற்றோடும் ஏனை உயிரீற்றுச் சொற்களோடும் புணரும் ‘ஏழ்’ என்னும் ழகரவீற்று எண்ணுப் பெயரும், உயிர் முதன் மொழி களோடு யகர வகர முதன் மொழிகளோடும் புணரும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களும் எவ்வகைத் திரிபுமின்றி இயல்பாய் முடிவன. இவை இயல்பாதலை,

       அல்லது கிளப்பின் இயற்கை யாகும்           (தொல்,321)
       வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும்
       தோற்ற மில்லை யென்மனார் புலவர்.         (தொல்.353)

எனவும்,

       நூறுார்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
      கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.            (தொல்.392)
      ஐ அம் பல் என வரூஉம் இறுதி
      அல்பெய ரெண்ணினும் ஆயியல் நிலையும்.  (தொல்.393)
     உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.          (தொல்.394)

எனவும்,

     ஏனவை புனரின் இயல்பென மொழிப. (தொல். 381)

எனவும் வரும் சூத்திரங்கள் விரித்துரைப்பன.

 (உ-ம்)   எல்லாரும்+குறியர்+எல்லாருங்குறியர், சிறியர், தீயர், 
                 பெரியர் (வந்தார், யாத்தார், அடைந்தார்)
           எல்லீரும்+குறியீர்=எல்லீரும்குறியீர், சிறியீர், தீயிர்,
                 பெரியீர் வந்தீர், யாத்தீர், அடைந்தீர்) 
           தாம்+குறியர்-தாங்குறியர், சிறியர், தீயர், பெரியர்
                 (வந்தார், யாத்தார், அடைந்தார்) 
           தாம்+குறிய=தாங்குறிய, சிறிய, தீய, பெரிய
                (வந்த, யாத்த, அடைந்த)
           நாம்+குறியம்=நாங்குறியம், சிறியம், தீயம், பெரியம் 
           யாம்+குறியம்=யாங்குறியேம், சிறியேம், தீயேம், பெரியேம் 
           தான்+குறியன்=தான்குறியன், சிறியன், தீயன், பெரியன்
           யான்+குறியேன்-யான்குறியேன், சிறியேன், தீயேன்,
                      பெரியேன்.

எனவும்,

     ஏழ்நூறாயிரம் 
     ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல்