இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 201
ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு எனவும் வரும்.
5. சாரியை பெறுவன
ஆண்மரக் கிளவி அரைமர வியற்றே. (தொல்.304) எகின்மர மாயின் ஆண்மர வியற்றே. (தொல்,336) பீரென் கிளவி அம்மொடுஞ் சிவனும். (தொல்.385) பூல்வே லென்றா ஆலென் கிளவியொ டாமுப் பெயர்க்கும் அம்மிடை வருமே. (தொல். 375)
குமிழென் கிளவி மரப்பெய ராயின் பிரென் கிளவியோ டோரியற் றாகும். (தொல்.385)
எனவரும் சூத்திரங்களால் முறையே ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் என வரும் பெயர்ச்சொற்கள் அம்சாரியை பெறும் என விதித்தார். இவற்றுள் பீர்-பீர்க்கு என்னும் கொடி, பூல்-பூலா என வழங்கும் செடி. ஏனையவை மரங்களாகும்.
(உ-ம்) ஆண் + கோடு= ஆணங்கோடு, செதிள், தோல், பூ எகின் “ “ “ எகினங்க்ோடு, " " " பீர் கொடி’ பீரங்கொடி, " " " பூல் ” கோடு பூலங்கோடு, " " " வேல் ” ” வேலங்கோடு, " " " ஆல் ” ” ஆலங்கோடு, " " " குமிழ் ” ” குமிழங்கோடு, " " "
எனவரும்.
வேற்றுமைக்கண் வரும் ஈம்’, ‘கம் என்ற மகர வீற்றுச் சொற்கள் இரண்டும், கோல் என்பதனோடு புணரும் தாழ்’ என்னும் சொல்லும் தமிழ் என்னுஞ் சொல்லும் ஆகிய ழகர வீற்றுச் சொற்கள் இரண்டும் அக்குச்சாரியை பெற்று முடிவன. இச்சாரியைப் -பேற்றினை,
வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை. (தொல்.329) தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருதல் உரித்து மாகும். (தொல்.384) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல். 385)
எனவரும் சூத்திரங்களால் விதிப்பர் தொல்காப்பியர்.