இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
220
தொல்காப்பியம்-நன்னூல்
கசதப ங்ளுநமக்களுள் ஒன்று குற்றியலுகரத்தைத் தொடர்ந்து நிற்றலால் அவ்வாறு முன் தொடர்ந்தவற்றின் தொடராக அவை கொள்ளப்படுமல்லது இடைத்தொடராகக் கொள்ளப்படா என்பது இதன் பொருள்.
(உ-ம் ஆர்க்கு, ஈர்க்கு, மொய்ம்பு எனவரும்.
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியும் உகர நிலையும். (தொல்.403)
இஃது இடைப்படிற் குறுகுமிடனுமாறுண்டே (எழுத்து 37) என்பதனாற் புணர்மொழிக்கண் குற்றியலுகரம் அரைமாத்திரை யினுங் குறுகுமென முன் மொழிமரபிற் கூறியதனை விலக்கி ‘அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே என்ற விதிப்படி அரை மாத்திரை பெற்று நிற்றலே எல்லாக் குற்றுகரங்களுக்குமுரிய பொதுவியல்பாகும் என அறிவுறுத்துகின்றது.
(இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் ஆறீற்றின்கண்ணும் குற்றியலுகரம் தன் அரைமாத்திரையைப் பெற்று நிற்கும் எ_று.
இனி எல்லா இறுதியும் உகரம் நிறையும் எனப்பாடங் கொண்டு அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆறீற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும் எனப்பொருள் கொள்வர் இளம்பூரணர்.
எனவே இருமொழிப் புணர்ச்சிக்கண் வரும் குற்றியலுகரம் எல்லாவிடத்தும் ஒரு மாத்திரை பெற்று நிற்குமென்பது இவ் வுரையாசிரியர் கருத்தெனத் தெரிகிறது. இக்கருத்துப் பொருந்து வதன்றென்பது மொழிமரபில் இடைப்படிற் குறுகு மென்னும் சூத்திரவுரையில் விளக்கப்பட்டது. அன்றியும் இருமொழிப் புணர்ச்சிக்கண் குற்றியலுகரம் ஒருமாத்திரை பெறுமென் றார்க்குச் செய்யுளியலில் ஆசிரியர் குற்றுகரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும் அவற்றான் அறுபது வஞ்சிச்சீர் கோடலும் பத்தொன் பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணுரற்றொரு தொடை கோடலு மின்றாய் முற்றிய லுகரமாகவே கொள்ள வேண்டுமாதலின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந்தங்கு மென்பர் நச்சினார்க்கினியர்.
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. (தொல்.409)