இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
63
நிலையெய்துங்கால் ஆண்டுப்பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு, ஆய்தம் அதிகாரப் பட்டமை கண்டு ஈண்டு எதிரது போற்றி விதிகூறினார் ஆசிரியர்” எனச் சிறப்புரையும் கூறினார்.
(இ-ள்) ஒரு பொருளினது நிறத்தின் கண்ணும் இசையின் கண்ணும் மாத்திரை பெருகித் தோன்றுங் குறிப்பு மொழிகளெல்லாம் அந்நீட்சியைக் குறித்தற்கெனத் தனியே எழுத்தால் எழுதப்பட்டு நடவா ஆப்தயம் சுருங்கா இடத்தான சொற்களாம்.
எனவே ஆய்தம் சுருங்கின் இம்மொழிக் குறிப்புப் புலப்படாதென்பது கருத்து.
(உ-ம்) “கஃறென்னுங் கல்லதரத்தம்’
‘கஃறென்னுந் தண்தோட்டுப் பெண்ணை’
என முறையே நிறத்தினும் இசையினும் ஆய்தம் நீண்டு ஒலித்ததாயினும் அந்நீட்சிக்கு மற்றுமோரெழுத்து வேண்டப் படாமை யறிக. இச்சூத்திரத்தில் வந்த அருகி என்னுஞ் சொல்லுக்குப் பெருகி யெனவே தக்கயாகப்பரணி யுரையாசிரியர் பொருள் கூறினார். (தாழிசை-37)
இவற்றை ஆய்தம் சுருங்காத சொற்களெனவே ஆய்தவொலி சுருங்கும் சொற்களும் உள என்பது பெறுதும். நன்னூலாரும் லகர லகர வீற்றுப் புணர்மொழிக்கண் வரும் ஆய்தம் தன் அரை மாத்திரையிற் குறுகும் என்பதனை,
லளவிற் றியைபினாம் ஆய்தம் அஃகும், (நன். 97)
என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டு எழுத்தின் எண் என்ற பகுதியில் ஆய்தக் குறுக்கம் எனத் தனியே ஒரெழுத்தாக எண்ணினார்.
குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. (தொல். 4)
இது நீட்டம் வேண்டின் என மேற்கூறப்பட்ட அளபெடை, மொழியிடைவைத்துணரும் பெற்றியதாகலின் அதனை யுணர்த்துகின்றது.
(இ-ள்) குன்றுவதான ஓசையையுடைய சொற்கண்ணே நின்று நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் அவ்வோசையை நிறைவிக்கும் என்பதாம்.