பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 : கருவி, காரணம், ஏது, நிமித்தம் என்பன வெவ்வேறு பொருளிலும் காரணம் என்னும் பொதுப் பொருளிலும் வழங்கு வன . முதல், துணை, நிமித்தம் எனக்காரணம் மூவகைப்படும். அவற்றுள் முதற்காரணமாவது காரியத்தோடு ஒற்றுமையுடை யது. துணைக்காரணமாவது, முதற்காரணம் காரியமாகும் வரையும் துணைநிற்பது நிமித்த காரணமாவது மேற்குறித்த இருவகைக் காரணங்களைக் கொண்டு காரியத்தினை நிகழ்த்தும் கருத்தாவாகும். முதற்காரணம் துனேக்காரணம் என்னும் இரண்டனையும் கருவியென்றும், இயற்றுதற் கருத்தா, ஏவுதற் கருத்தா என்னும் நிமித்தகாரணம் இரண்டனையும் கருத்தா என்றும் வழங்குதல் மரபு. வனந்தான் என்புழிக் குடமாகிய காரியத்திற்கு அதுவதுவாகிய மண் முதற்காரணம். குயவனது அறிவும் மனம் புத்தி முதலிய அகக்கருவிகளும் ஆகிய அறிதற் கருவியும் தண்டசக்கர முதலிய செயற்கருவியும் அம்முதற் காரணத்திற்குத் துணையாய்நின்று காரியத்தைத் தருதலின் துணைக் காரணமாகும். குயவன் நிமித்தமாகக் குடமாகிய காரியந் தோன்றுதலின் அவன் நிமித்தகாரணமாவன். அறிதற் கருவியினே ஞாபகக் கருவியெனவும் செயற் கருவியினைக் காரகக் கருவி எனவும் வழங்குவர் சிவஞானமுனிவர். இம் மூவகைக் காரணங்களையும் ‘முதல்’ என வழங்குவர் தொல்காப்பியர். இச் சூத்திரத்தில் வினை முதல் என்பது, கருவி முதலிய காரணங்காேத் தொழிற்படுத்தும் கருத்தாவாகும். கருவி என்பது, வினைமுதலின் தொழிற்பயஇனச் செயப்படு பொருளின் கண் செலுத்தும் முதற் காரணமும் துணைக்காரணமுமாகும். அனைமுதல் என்பது, அத்தன்மையவாகிய முதல்’ என அவற்றது இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. (உ. ம்) கொடியொடு துவக்குண்டான்; ஊசியொடு குயின்ற துரசும் பட்டும் எனவும், அகத்தியற்ை றமிழுாைக்கப் பட்டது; வேலான் எறிந்தான் எனவும் வரும் . மூன்ரும் வேற்று மைக்கு உடனிகழ்ச்சி முதலிய பிறபொருளும் உளவேனும் அவற்றுள் வினைமுதல், கருவி என்பன சிறந்தமையான் முதற்