பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 யேற்ற பெயர்ப் பொருண் வேற்றுமை செய்தல் அவற்றின் பொருளாகும் என்பது இதன் பொருள். தொல்காப்பியத்திற் கூறப்படாமல் பிற்காலத்தில் இன்னின் திரியாக அமைந்த இல்லுருபு புதியன புகுதல் என்பதால் ஈண்டு ஐந்தாம் வேற்றுமையுருபாக இடம்பெற்றது. அம். ஆருகுவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. இஃது ஆரும் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது . (இ-ள்) ஆரும் வேற்றுமையாவது, அதுவெனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல்லாம். அது உடைப் பொருளாகி நிற்குந் தன்ைேடு ஒற்றுமையுடைய பொருளானும் தன்னின் வேருகிய பொருளானும் இதனது இது? என்பது படவரும் அத்தன்மையனவாகிய கிழமையைப் பொருளாக உடையது . லி-இ . எனவே ஆருவது கிழமைப் பொருட்டென்றும், அக்கிழமை, தன்ன்ை வந்த தற்கிழமையும், பிறிதான் வந்த பிறிதின் கிழமையும் என இரண்டென்றுங் கூறியவரும். தன் என்றது தன்ைேடு ஒற்றுமையுடைய பொருளே. பிறிதென்றது தன்னின் வேருகிய பொருளே’’ என்பர் சேவைரையர். இதன. இவை: என்னும் பன்மையுருபும் ஆது என்னும் ஒருமையுருபும் அடங்க அன்ன கிளவி எனப் பன்மையாற் கூறினர் என்பர் நச்சி ஞர்க்கினியர், பொருட்கிழமையும் பண்புக்கிழமையும் தொழிற்கிழமையும் அவை போல்வனவும் எனக் கிழமை பலவகைப்படும். அவற் றுள் ஒன்றின வரைந்து சுட்டாது இதனது இது? என்னும் சொல்லால் தோன்றும் கிழமை மாத்திரம் சுட்டுவது ஆரும் வேற்றுமை என்பர், இதனது இதுவெனும் அன்னகிளவிக் கிழமைத்ததுவே" என்ருர்,