பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கங். இரண்டன் மருங்கி னுேக்க ளுேக்கமவ் விரண்டன் மருங்கி னே துவு மாகும். இஃது இரண்டாம் வேற்றுமையோடு மூன்ருவதும் ஐந்தாவதும் மயங்குமாறுணர்த்துகின்றது. (இ-ள்) இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட நோக்கு அல் நோக்கமாகிய பொருள் மூன்ருவதற்கும் ஐந்தா வதற்கும் உரிய ஏதுப் பொருண்மையுமாகும். எ-று. இரண்டாம் வேற்றுமைக்குரிய நோக்கப்பொருண்மை நோக் கிய நோக்கமும் நோக்களுேக்கமும் என இரண்டுவகைப்படும். நோக்கிய நோக்கம் என்பது, கண்ணுல் நோக்குதல். நோக்கு அல் நோக்கம் என்பது நோக்களுேக்கம் என்ருயிற்று. நோக்கனுேக்கம் - மனத்தால் ஒன்றனை நோக்குதல். நோக்கு அல் நோக்கத்தால் நோக்கப்படும் பொருளே நோக்கனுேக்க மென்ருர். நோக்களுேக்கம் அவ்விர்ண்டன் மருங்கின் ஏதுவுமாகும் எனவே மூன்றும் ஐந்துமாகிய அவ்விரண்டும் தன்பொருளி னிங் காது இரண்டா வதன் பொருட்கண் வரும் என்பதாம். (உ-ம்) வானேக்கி வாழு முயிரெல்லாம் மன்னவன் கோனேக்கி வாழும் குடி? என்புழி வானே நோக்கி வாழும், கோலே நோக்கிவாழும் என இரண்டாமுருபு வருதலேயன்றி, வானுளுேக்கி வாழும் வானின் நோக்கி வாழும், கோலானுேக்கி வாழும், கோலிளுேக்கி வாழும் என மூன்ருமுருபும் ஐந்தாமுருபும் வந்தவாறு கண்டுகொள்க. சுச. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகை வயின் அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. இஃது ஆருவது நான்காவதஞ்ெடு மயங்குமாறுணர்த்துகின்றது.