பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17す (இ-ள்) வினையின் கண்ணும் பண்பின் கண்ணும் ஆராயத் தோன்றும் ஆள் என்னும் ஈற்றினையுடைய பெயர் விளிக்கு மிடத்து ஆய் எனத் திரியும். (உ-ன்.) உண்டாள், உண்டாய்; கரியாள், கரியாய் எனவரும், விளிவயினை என்பதனை எல்லாவிடத்தும் கூட்டுக. ளசஎ. முறைப் பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. இஃது எய்தியதுவிலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ ள்) ளகாரவீற்று முறைப்பெயர் னகார வீற்று முறைப் பெயர் போல ஏகாரம் பெற்று விளியேற்கும். எ.று. (உ-ம்.) மகள், மகளே, மருமகள், மருமகளே என வரும். ளச.அ. சுட்டு முதற் பெயரும் வினவின் பெயரும் முற்கிளந் தன்ன வென்மனர் புலவர். இது ளகரவீற்றுள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்) அவள் இவள் உவள் என்னும் ளகாரவீற்றுச் சுட்டு முதற்பெயரும் யாவள் என்னும் வினவின் பெயரும் முற் கூறிய சுட்டு முதற்பெயரும் வினுப்பெயரும் போல விளி கொள்ளா. எ-று. ளசக, அளபெடைப் பெயரே அளபெடை யியல. இஃது எய்தாதது எய்துவித்தது. (இ.ஸ்) லகார ளகார ஈற்று அளபெடைப்பெயர் முற் கூறிய னகார ஈற்று அளபெடைப் பெயர்போல அளவு நீண்டு இயல்பாய் விளியேற்கும். எ-று. (உ.ம்.) மாஅஅல், வேஎஎள் எனவரும். இங்ங்ணம் ளகர லகர வீற்று உயர்திணைப் பெயர்கள் விளி யேற்குமாறுணர்த்திய தொல்காப்பியச் சூத்திர விதிகளையடி யொற்றி அமைந்தன. பின்வரும் நன்னூற் சூத்திரங்களாகும்.