பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 78 யுடைய பெயரொடு தோன்ருது இடைச் சொல்லோடு தோன் றிற்ருயினும் அதனையும் விளியாகக் கொள்வர் தெளிவோர். бТ~Q] • (உ-ம்) அம்மா சாத்தா எனவரும். சாத்தா என்பதே எதிர்முக மாக்குமாயினும் அம்ம என்பதும் அவ் எதிர்முகமே குறித்து நிற்றலின் விளியாகக் கொள்ளப்படும் என்பார் விளியொடு கொள் ப என்ருர் . என்பர் இளம்பூரணர், ளடுச. தநநு எயென வவைமு த லாகித் தன்மை குறித்த னளர வென் கிளவியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. இஃது உயர்திணைப் பெயருள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்) த, ந, து என்னும் உயிர்மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாக உடையனவாய் ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்துநின்ற ன, ள, ர என்னும் ஒற்றுக்களே இறுதியாகவுடைய சொல்லும் அவைபோல்வன பிறவுமாகிய பெயராகிய நிலைமையையுடைய சொற்கள் வரின் அவை விளியொடு பொருந்துதல் இல்லையாதல் வேண்டும். 6T-ms. (உ-ம்) தமன், தமர், தமள்; நமன், நமர், நமள், நுமன், நூமர், நுமள்; எமன், எமர், எமள் எனவும், தம்மான், தம்மார், தம்மாள்; நம்மாள், நம்மார், நம்மாள்; நும்மான், நும் மார், நும்மாள்; எம்மான், எம்மார், எம்மாள் எனவும் வரும் இப் பெயர்கள் விளியேலாமை கண்டுகொள்க. அன்னபிறவும் என்ற தல்ை, மற்றையான், மற்றையார், மற்றையாள் ; பிறன், பிறர், பிறள் என்பனவும் விளியே லாமை கொள்ளப்படும்.