பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 (இஸ்) இருதி ணக் கண்ணும் விளியேற்பனவாகச் சொல் பட்ட எல்லாப் பெயரும் சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கின் கண் விளிக்குமிடத்துத் தம் மாத்திரையின் மிக்கு ஒலித்தலே யுடையனவாகும். எ-று. (உ- ம்) நம்பீஇ, சாத்தாஅ எனவரும். ஈண்டு அளபிறத்தல் என்றது, நெட்டெழுத்து அளபெடை யாயும், அளபெடை மூன்று மாத்திரையின் மிக்கும் சேய்மைக் குத் தக்கவாறு நீட்டிசைத்தலே. சேரமான், மலேயமான் என ஈற்றயல் எழுத்து மிக்கொலித்த வழி ஈற்றயல் நீண்டதாகக் கொள்ளப்படும். இச்சூத்திரப் பொருளுடன், ள உள. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். என்ற சூத்திரப் பொருளேயும் இயைத்துக் கூறுவது, 3 2. அண்மையி னியல்பு மீறழிவுஞ் சேய்மையின் அளபும் புலம்பின் ஒவு மாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். அணிமைக்கண் உள்ளவர்களே விளிக்குமிடத்து இயல்பும், ஈற்றினது அழிவும், சேய்மைக்கண் உள்ளவர்களே விளிக்கு மிடத்து நெட்டெழுத்து அளபெழுதலும், புலம்புதற்கண் ஒகாரம் பெறுதலும் ஆம்?? என்பது இதன் பொருள். ளடுங். அம்ம வென்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவன தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இது, அம்ம என்னும் இடைச்சொல் விளியேற்குமாறு கூறு கின்றது . (இ-ள்) அம்ம என்னும் அசைச் சொல்லினது நீட்ட மாகிய அம்மா என்னுஞ்சொல் விளிகொள்ளும் முறைமையினே