பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 தருவனவாம். பொது மொழிகளாவன ஒன்ருய் நின்று ஒரு பொருள் தந்தும் அதுவே தொடர்ந்து நின்று பல பொருள் தந்தும் இவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்பன என்பது இதன் பொருளாகும். (உ-ம்) ஒருமொழிகளாவன, நிலம், நிலத்தன், நட, நடந்தான், தில், மன், தவ, நனி என்பன முதலியன. தொடர் மொழிகளாவன, நிலம் வலிது, அதுகொல், சாலப் பகை, நிலங்கடந்தான், நிலத்தைக் கடந்த நெடுமால் என் பன முதலியன. பொது மொழிகளாவன, எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாரா நின்ருன், உரைத்திட்டான் என்பன முதலியன. இவை ஒருமெ ழிகளாய் நின்று ஒரு பொருளைத் தருதலேயன்றி, எள்ளைத் து, கொள் ளேத் து, தாவுகின்ற மரை, வேகின்ற கை, எழுந்து பின் இருந்தான், வந்து நின்ருன், உரைத்துப் பின் இட்டான் எனத் தொடர்மொழிகளாய்ப் பலபொருள் தருதலின் பொது மொழிகளாயின. ஈண்டுத் தொடர்மொழி பல பொருளன என்றது. பல சொல்லிற் பலபொருளே. மொழிகள் யாங்கனுந் தொடராது தனித்து நில்லாவேனும், இப்பொருட்கு இச்சொல் என இறைவனுலும் அறிவுடையோரா லும் படைக்கும் படைப்புக் காலத்தும் இரண்டு முதலிய தொடர் மொழிகளுள் ஒன்று நின்று மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலின் ஒருமொழி என்ற பாகுபாடும் உளதாயிற்று. இவ் வொரு மொழியைத் தனி மொழியெனவும் வழங்குவர். அது பெயர், வினே, இடை, உரி என நால்வகைப்படும். சொற்கள் தொடருங்காற் பயனிலே வகையானும் தொகைநிலை வகையா னும் எண்ணுநில வகையானும் தொடரும் என்பர் தமிழ் நூலார். சாத்தன் வந்தான், பயனிலை வகை. யானைக்கோடு, தொகை நிலவகை. தீநீர், எண்ணுநிலை வகை. சொற்கள் தொடருங்கால் அவாய் நிலையானும் அண்மையானும் தகுதி யானும் தொடரும் என்பர் வடநூலார். ஆவைக்கொணு: அவாய்நிலை. ஆற்றங்கரைக்கண் ஐந்து கனிகள் உளவாகின் றன, அண்மை. நீரால் நனே, தகுதி. தொடர்மொழி இரு Tಣಿ தொடரும் பன்மொழித் தொடரும் என இருவகைப்