பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 படும். அரசன் வந்தான், இருமொழித் தொடர். அறம் வேண்டி அரசன் உலகம் புரந்தான், பன்மொழித்தொடர். 268. ஒன்றெழி பொதுச்சொல் விகாரந் தகுதி ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே முதருெகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை. இருதினை ஆண்பெண்களுள் ஒன்றனேயொழிக்கும் பொதுச் சொல்லும், வலித்தல் முதலிய ஒன்பது விகாரச் சொல்லும், மூவகைத் தகுதி வழக்குச் சொல்லும், ஆகு பெயர்ச் சொல்லும், அன்மொழித்தொகைச் சொல்லும், வினைக்குறிப்புச் சொல்லும், முதற்குறிப்புச் சொல்லும், தொகைக் குறிப்புச் சொல்லும், இவையல்லாத பலவாற்ருன் வருங் குறிப்புச் சொல்லும், இவை போல்வன பிறவும் குறிப்பினுல் இருதிணையைம்பாற் பொருளேத் தருஞ் சொற்களாகும். இவையல்லாதன வெல்லாம் வெளிப் படையால் அப்பொருள்களைத்தரும் சொற்களாகும்?? என்பது இதன் பொருள். (உ-ம்) ஆயிரமக்கள் பொருதார், பெருந்தேவி கருவுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் பணிமக்கள் உளர் என்பன இருதினே ஆண் பெண் பால்களுள் ஒன்றனேயொழித்து ஒன்ற&னக் குறிப்பால் உணர்த்தின. இப்பெற்றம் உழவொழிந்தன, இப்பெற்றம் கறக்கும் என்பன அஃறிணை ஆண்பெண்பால்களுள் ஒன்ற&ன யொழித்து ஒன்றனைக் குறிப்பால் உணர்த்தின. குறுத்தாட்பூதம், மரைமலர், குலிகமோடிகலிய வங்கை எனவரும் மூவகை விகாரச் சொற்களும் குறுந்தாள், தாமரை, இங்குலிகம் என்பவற்றைக் குறிப்பால் உணர்த்தின. கால்கழி.இ வருதும், நன்காடு, பறி என்னும் மூவகைத் தகுதி வழக்குச் சொற்கள் தத்தம் பொரு அளக் குறிப்பால் உணர்த்தின. புளித்தின்ருன் என்புழிப் புளி என்பது ஆகுபெயராய்ப் பழத்தினக் குறிப்பாலுணர்த்திற்று. பொற்ருெடி என்னும் அன்மொழித்தொகை அதனையுடையாளக் குறிப்பாலுணர்த்தியது. சொலல்வல்லன் என்புழி வல்லன் என்பது வினைக்குறிப்புப் பொருளைக் குறிப்பால் உணர்த்திற்று. 'அறத்தாறிதுவென வெள்ளைக்கிழிபு என்புழி முதற் குறிப்பு