பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இத் தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட அவற்றுள் ஒன்றேயிருதிணத் தன் பால் ஏற்கும்: (நன்-283) எனப் பவணந்தியார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர். இனி, பன்மை சுட்டிய பெயர் என்ப தற்கு இருதிணையிலும் பன்மைப்பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயர் என்பதெ பொருளாகும். இதுவே தொல்காப்பியனர் கருத்தென்பது, தோமென்கிளவி பன்மைக் குரித்தே: (தொல்-சொல்-131) எனவும் எனக்கிளவி பன்மைக் குரித்தே (டிை டிை 187) எனவும் வருஞ் சூத்திரங்களில் உயர்திணைப் பலர் பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மை என்ற சொல்லால் ஆசிரியர் சுட்டுதலால் நன்கு புலம்ை. இங்ங்னம் பன்மை சுட்டிய பொதுப்பெயர்கள் தமக்குரிய இருதிணேப்பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும், அவற்றுள் ஒருசார் பெயர் கள், அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணுெருமை பெண்ணுெருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ஒன்றே பலவே ஒருவர் என் னும், என்றிப்பாற்கும் ஒரன்னவ்வே” எனச் சூத்திரஞ் செய் தார் தொல்காப்பியர்ை. இதன்கண் என்றிப்பாற்கும்’ என்ற எச்சவும்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இரு திணைப் பன்மையையும் ஏற்று வருதலே ஆசிரியர் தழி இக் கூறிஞராதல் வேண்டும். இவ்வுண்மை, 'தன்பாலேற்றலே உம்மையாற் றழி இயினர்?’ எனவரும் சிவஞான முனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலளுதல் காண்க. தாம் வந்தார், தாம் வந்தன எனப் பன்மைப் (قا--ع) பொதுப்பெயர் உயர்திணைப் பன்மையும் அஃறிணைப் பன்மை யும் உணர்த்தி நின்றன. இனி, உயர்திணை ஆணுெருெமை, பெண்ணுெருமை அஃ றிணை ஒருமை பன்மை எனப் பல பால்களையும் சுட்டி நிற்ற லிற் பன்மை சுட்டியபெயர் என்றும் ஆண்மை சுட்டிய பெயர்; பெண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டியபெயர் என் பனவும் பல பால்களைச் சுட்டி நின்றனவாயினும், இரண்டு பால் களையும் மூன்று பால்களையும் சுட்டி நிற்கும் அப்பெயர்கள்,