பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 (உ-ம்.) யானே வந்தது, யானே வந்தன, யானைவந் தான், யானை வந்தாள் எனவும், நெடுங்கழுத்தல் வந்தது, நெடுங்கழுத்தல் வந்தன, நெடுங்கழுத்தல் வந்தான், நெடுங் கழுத்தல் வந்தாள் எனவும், பெருங்கால் யானை வந்தது, பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் முறையே பன்மை இயற் பெயர், பன்மைச் சினைப்பெயர், பன்மைச் சினைமுதற்பெயர் மூன்றும் அஃறிணையொருமைக்கும் அத்திணைப் பன்மைக்கும் உயர்திணை ஆணுெருமை பெண்ைெருமைக்கும் உரியவாய் வந்தமை காண்க . பன்மைக்கேயன்றி ஒருமைக்கும் உரியவாய் வருவன வற்றைப் பன்மைப் பெயரென்றது என்ன? என வி ைநிகழ்த் திக்கொண்டு, பன்மைப் பெயர் ஒருமையுணர்த்து மாயினும் பிறவாற்ருன் உணர்த்தப்படாத பன்மையை ஒருகால் உணர்த் தலின் அப்பன்மையான் அவை வரைந்து சுட்டப்படுதலின் அப்பெயரவாயின. என விடை கூறுவர் சேவைரையர். அடைமொழிகள் இனமுள்ளதும் இனமில்லதும் என இரு வகைப்படும். செந்தாமரை என்புழிச் செம்மையாகிய அடை மொழி அத்தாமரைக்கு இனமாகிய வெண்டாமரையாகிய இன முண்மை சுட்டி அதைேடுளதாகிய இயைபின நீக்கி நிற்றலின் இது பிறிதினியைபு நீக்கிய விசேடணம் எனப்படும். செஞ்ஞா யிறு என்புழிச் செம்மையாகிய அடைமொழி கருமை முதலிய பிற நிறமுடைய பிற ஞாயிறுண்டென இனஞ் சுட்டாது, செம்மை நிறம் ஞாயிற்ருேடு இயையுடையது என்ற அளவில் ஞாயிற் றையே சுட்டிநிற்றலின், இனமில்லா அடைமொழியாகிய இது தன்னேடியை பின்மை நீக்கிய விசேடணம் எனப்படும். பன்மை சுட்டிய பெயரென்பது, வெண்குடைப் பெரு விறல்’ என்பது போல, ஒருமையியைபு நீக்காது இயைபின்ம்ை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பது பட நின்றது’’ என்பர் சேவைரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டியபெயர் உயர்திணைப் பன்மையை யுணர்த்தா தொழிதலும் ஏனையொருமைகளே யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி