பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 இகர வீறும் அமைந்திருத்தலானும் இங்ங்னம் ஆணையும் பெண் னேயும் வரைந்துணர்த்தும் தன்மை அஃறிணைக் கின்மை யானும் இவை அஃறிணைப் பெயராகாது இருதினேக்குமுரிய பொதுப் பெயராதல் புலனும். அலவன், கள்வன் என்பன னகரவீற்றனவாயினும் அவை ஆண்பாலுணர்த்தாது நண்டு என்னும் இனத்தையுணர்த்தி நிற்றலின் அஃறிணைப் பெயரா வதன்றி விரவுப்பெயராகாமை யுணர்க. ளகளை. தினேயொடு பழகிய பெயரலங் கடையே. இஃது எய்தியது ஒருமருங்கு விலக்குகின்றது. (இ-ள்) கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணையைச் சுட்டுதல் அவ்வத்திணேக்குரியவாய் வழங்கப்பட்டுவரும் பெயரல்லாதவிடத்து. எ-று. எனவே தினேயொடு பழகி வழங்கப்பட்டு வரும் விரவுப்பெயர் இரு திணையுஞ் சுட்டிவரும் என்பதாம். (உ-ம்.) செருமிகு முன்பிற் கூர்வேற் காளே..?? எனவும் 'திருந்துவேல் விடலையொடு வருமெனதாயே! எனவும் உயர்திணை சுட்டிவந்தவாறு காண்க. காளை விடலே என்னுந் தொடக்கத்தன பொருள் வகையானன்றிப் பாலே முதலிய நிலத்துக்கு உரிமைபூண்டு நிற்றலின் தினேயொடு பழகிய பெயரெனப்பட்டன.