பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 சொல் வரைந்தறியப் பிரித்தனர் காட்டல்’ என அல்லீறும், மறைக்குங்காலே மரீஇய தொரால் என ஆலீறும் வியங் கோள் விகுதிகளாக உடம்பொடு புணர்த்துக் கூறியுள்ளமை காணலாம். எனினும், பவணந்திமுனிவர் காலத்து வியங் கோள் விகுதிகளாகப் பெருக வழங்கியவை க, இய, இயர் என்பனவாதலின் கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள்: என இம்மூன்றையுமே வியங்கோள் விகுதிகளாகக் குறித் துள்ளார். உ.உ.எ. பல்லோர் படர்க்கை முன்னிலே தன்மை யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு கொள்ளா. இதுவும் அது. (இ-ள்) பல்லோர் படர்க்கையும், முன்னிலேயும், தன்மை யுமாகிய அப்பொருட்கண் வரும் மூன்றும் நிகழ்காலத்து வரும் செய்யும் என்னும் முற்றுச் சொல்லொடு பொருந்தா. எ.நு. எனவே படர்க்கையில் உயர்திணை ஆணுெருமை பெண் ணுெருமை, அஃறிணை ஒருமை பன்மை என்னும் நான்கு பால்களினும் வரும் என்பதாம். நிகழுங்காலத்துச் செய்யும் என்னும் கிளவி என அச்சொல்லால் தோன்றும் காலம் உணர்த்தியவாறு. செய்யுமென்னும் முற்றுச்சொல் உயர்தினைப் பன்மைப் படர்க்கையிடத்தும் முன்னிலையிடத்தும் தன்மையிடத்தும் வரு தலில்லே என்னும் இவ்விதியின, 347. பல்லோர் படர்க்கை முன்னிலே தன்மையிற் செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினர் பவணந்திமுனிவர், உஉ அ. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின் செயச் செயற்கென அவ்வகை யொன்பதும் வினேயெஞ்சு கிளவி. இது வினையெச்ச வாய்பாடுகளைத் தொகுத்துக் கூறுகின்றது.