பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 எல்லா முதனிலே மேலும் மார் எனவே வந்து வினே கொண்டு முடியும். இவ்வேறுபாடு கருதி ஆர்விகுதியின் வேருக மார் என்பதனைத் தனியீருகக் கொண்டார் தொல்காப்பியனுர், இச்சூத்திரத்தை அடியொற்றியது, 327. அர் ஆர் பவ்வூ ரகர மாரீற்ற பல்லோர் படர்க்கைமார் வினேயொடு முடிமே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். அ. ஒன்றறி கிளவி தடற ஆர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது அஃறினேக்கண் ஒன்றறிசொல் ஆமாறு உணர்த்து கின்றது. (இ-ள்) ஒன்றறி சொல்லாவது தறட என்னும் ஒற்றுக்களே ஊர்ந்து வந்த குற்றியலுகரத்தினே ஈருகவுடைய சொல்லாம். 6T-g}} • ஒன்றறிகிளவி, அஃறிணை ஒன்றன்பாற் சொல். தறட வூர்ந்த குன்றியலுகரம் என்பன குற்றிய லுகர வீருகிய துறுடு என்னும் விகுதிகள் . (உ-ம்) வந்தது, வாரா நின்றது, வருவது, கரிது எனவும், கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று எனவும், குண்டு கட்டு, குறுந்தாட்டு எனவும் வரும். குற்றியலுகரம் எனற்பாலது குன்றியலுகரம் என மெலிந்து நின்றது. டதற என நெடுங்கணக்கு முறையாற் கூருது தறட எனச் சிறப்பு முறையாற் கூறினர். துவ்விகுதி மூன்று காலமும் வினேக் குறிப்பும் பற்றி வருதலும், றுவ்விகுதி இறந்த காலமும் வினைக் குறிப்பும் பற்றி வருதலும், டுவ்விகுதி விஜனக்குறிப்பே பற்றி வருதலுமாகிய வேறுபாடுடைமையின், துள்விகுதி யொன்றே தன்முன்னின்ற எழுத்து நோக்கி றுவ்விகுதியாகவும்