பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 குறிப்பு எனவும் இருதிறத்தனவாகக் கொண்டு இடைச் சொற்கள் எட்டு வகைப்படும் என்ருர் நன்னூலார். இவற்றுள் தத்தம் பொருள் ஆவன: ஏ ஒ முதலாய்ப் பிரிநிலே முதலாகிய பொருளேத் தோற்றி நிற்பன. குறிப்பாவன, விண்னென, ஒல்லென, கல்லென முதலாயின. என விளக்குவர் மயிலைநாதர். இவ்வியலில் தொல்காப்பியர் விரித்துக் கூறிய இடைச் சொற்களின் பொருளையெல்லாம், 420. தெரிநிலே தேற்றம் ஐயமுற் றெண் சிறப் பெதிர்மறை யெச்சம் வினு விழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்கம் இன்னன இடைப்பொருள். என ஒரு குத்திரத்தால் தொகுத்துணர்த்தினர் நன்னூலார். தெரிநிலே, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினு, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம் என்னும் இப்பதின்ைகும் இவை போல்வன பிறவும் இடைச் சொற்களின் பொருள்களாம் என்பது இதன் பொரு ளாகும். இன்னன? என்ற தல்ை தொறு, தோறு, ஞெரேர், அந்தோ, அன்னே, கொல்லோ, ஆ, ஆவோ, அஆ, இனி, என், ஏன், ஏதில், ந, கல், ஒல், கொல், துடும், துண், பொள், கம், கொம் எனவரும் இடைச் சொற்களின் பொருள் வகைகளே யும் தழுவிக்கொள்வர் மயிலேநாதர். இவற்றெடு சுட்டு, பொருளும் வினப்பொருளும் தழுவிக் கொள்வர் சிவஞான முனிவர். இடையியலில் உணர்த்தப்படும் இசைநிறை, அசை நிறை, தத்தம் குறிப்பிற் பொருள் செய்வன ஆகிய மூவகை இடைச் சொற்களுள், தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவாகிய இடைச் சொற்கள் பொருளுணர்த்துதற் சிறப்புப் பரப்புடையன வாத லால் அவற்றை இவ்வியலின் முன்னர் உணர்த்துவர் தொல் கர்ப்பியர். உடு. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னேச் சொல்லே. இது தத்தம் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொற்களுள் ஒன்றன் பாகுபாடு கூறுகின்றது.