பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.13 (உ.ம்) வெண்மதியும் பாம்பும் உடனே வைத் தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத் தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே?? (6-45-8) எனத் திருநாவுக்கரசரும், எல்லே யிளங்கிளியே இன்னும் உறங்குதியோ? (திருப்பாவை-15) எல்லே யீ தென்ன இளமை எம்மனேமார் காணில் ஒட்டார்: (நாச்சியார் திருமொழி-5-3) என ஆண்டாளும் அருளிய திருப்பாடல்களில் எல்லே என்னும் இடைச்சொல் இரங்குதற் பொருள்பட வருதல் இங்கு நோக்கத் தகுவதாகும். உஎல். இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர் க்குரி யெழுத்தின் வினேயொடு முடிமே. இஃது ஆர் என்னும் இடைச்சொல்லின் முடிபு கூறுகின்றது. (இ-ள்) இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச்சொல் பலர்றி சொல்லால் முடியும். எ-று. இங்கு இயற்பெயர் என்றது, இருதினேக்கும் அஃறிணையில் இருபாலுக்கும் உரியபெயரை. பலர்க்குரியெழுத்தின் வினே என்றது, உயர்திணைக்குரிய பலர்பால் வினையை. முடியுமே? என்னும் செய்யுமென்னும் முற்று உயிர்மெய் கெட முடிமே என வந்தது. (உ-ம்) பெருஞ்சேந்தனர் வந்தார்; முடவர்ை வந்தார்; முடத்த மக் கண்ணியார் வந்தார்; தந்தையார் வந்தார்; எனவும், நரியார் வந்தார் எனவும் வரும். நம்பியார் வந்தார்; நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப்பெயர்முன் ஆர் வருதல் ஒன்றென முடித்தல் என்பதனுற் கொள்ளப்படும். சாத்தன், சாத்தி என்னும் ஒருமைப் பெயர் முன்வந்து ஒருமை சிதையாமல் சாத்தனர், சாத்தியார் என நிற்கும் ஆர் என்னும் இடைச்சொல், அப்பெயரோடு