பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 முற்றுதல் என்னும் பொருட்பண்பு ஒற்றுமை நயத்தால் உம்மைச் சொல்மேல் ஏற்றப்பட்டது. தொகைச்சொல் என்ரு ரேனும் முற்றும்மையடுத்த பொருட்பெயரும் கொள்ளப்படும். முற்றும்மை எச்சப்படுதல் விதிவினைக்கண் அன்றி எதிர்மறை வினைக்கண்ணே என்பது ஏற்புழிக் கோடலாற் கொள்ளப்படும். உரித்தும் ஆகும் எனவே எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். (உ-ம்) ஐம்பதுங் கொடால்; எல்லாரும் வந்திலர் என்புழி முற்றும்மை தம்பொருளுணர்த்தாது, சில குறையக்கொடு, சிலர் வந்தார், என்னும் பொருள் தோன்றி நின்றவாறு காண்க. இச் சூத்திரப் பொருளே, 425. முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும். என்ற சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார் . உஅசு. ஈற்றுநின் றிசைக்கும் ஏயெ னிறுதி கூற்று வயி னேரள பாகலு முரித்தே. இஃது ஈற்றசை யேகாரத்திற்கு ஓரிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) செய்யுளின் இறுதிக்கண் நின்று இசைக்கும் ஈற்றசையேகாரம் பொருந்தக்கூறும் கூற்றிடத்து ஒரு மாத்திரைத் தாகக் குறுகலும் உரித்து. எ-று. (உ-ம்). கடல்போற் ருேன்றல காடிறந் தோரே? (அகம்-1) என்புழி ஏகாரம் ஒரு மாத்திரைத்தாக நின்றவாறு அறிக. ஈற்று நின்றிசைக்கும் ஏ என் இறுதி என்றது, ஈற் றசை யேகாரத்தை, ஒரளபு-ஒரு மாத்திரை. ஓரளபாகலும் என்புழி உம்மை எதிர்மறை. எனவே ஓரளபாகாது தனக் குரிய இரண்டு மாத்திரைத்தாக நிற்றலே பெரும் பான்மை என்பதாம். உஅஎ. உம்மை யெண்ணுவேமெனவெனெண்ணுந் தம் வயிற் ருெகுதி கடப்பா டிலவே. இஃது எண்களுக்குச் சொல் முடிபு வேறுபாடு கூறுகின்றது.