பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 ஏயி னுகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. இஃது எண்ணுதற் குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட என , என்ரு என்பனவற்ருல் வரும் எண்ணின் முடிவும், எண்ணிடைச் சொல்லாலன்றிப் பெயரால் எண்ணப்படும் செவ்வெண்ணின் முடிவும், ஏகாரத் தால் வரும் எண்ணின் முடிவும் எவ்விடத்து வரினும் தொகை யின்றி நடவா. எ-று. இறுதி என்றது ஈண்டு அவற்றை முடித்தற்குரிய சொல் முடி பினே. (உ-ம்) நிலனென நீரென விரண்டும்; நிலனென்ரு நீரென்ரு விரண்டும்; நிலம் நீர் தீ வளி விசும்பு எனும் ஐந்தும்; ஞாயிறே திங்களே எனும் இருசுடரும் எனத்தொகை பெற்று வந்தன. எண்ணுங்கால் தொகைபெற்றே வருவனவாகிய இவ்விடைச் சொற்களேயும் தொகையின்றியும் வருவனவாகிய உம், என, என்று, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்களையும் பகுத் துணர்த்தும் முறையில் அமைந்தது, 427. பெயர்ச்செவ் வெண்ணே யென்ரு வெணுவெண் நான்குந் தொகைபெறும்; உம்,ை மயென் றெனவொ டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். பெயரிடத்து வரும் செவ்வெண்ணும், ஏகாரவெண்னும் என்ரு, என, என்னும் எண்ணிடைச் சொற்களும் ஆகிய நான்கும் இறுதியில் தொகைபெற்று நடக்கும். உம், என்று, என, ஒடு என்னும் எண்ணிடைச் சொற்கள் நான்கும் தொகை பெருதும் நடக்கும்?’ என்பது இதன் பொருளாகும். (உ-ம்). நிலனும் நீரும் தீயும் நல்ல ; சாத்தனென்று கொற்றனென்று குறவனென்று சொன்னவர் வந்திலர்; நில