பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 கூடுஉ செழுமை வளனுங் கொழுப்பு மாகும். (இ-ள்) செழுமை என்பது வளனுங் கொழுப்புமாகிய பண்புணர்த்தும். எ-று. (உ-ம்) செழும்பல் குன்றம்’ எனவும் செழுந்தடிதின்ற செந்நாய்' எனவும் முறையே வளமும் கொழுப்பும் உணர்த் தியது. கூடுங். விழுமஞ் சீர்மையும் சிறப்பும் மிடும்பையும். (இ~ள்) விழுமம் என்னுஞ்சொல் சீர்மை, சிறப்பு, இடும்பை என்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) விழுமியோர்க் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு: எனவும், வேற்றுமையில்லா விழுத்தினேப் பிறந்து எனவும், நின்னுறு விழுமங் களைந்தோன் எனவும் முறையே சீர்மை யும் சிறப்பும் இடும்பையும் உணர்த்தியது. நடடுச. கருவி தொகுதி. நடடுடு கம நிறைந் தியலும் . (இ-ள்) கருவி என்னும் உரிச்சொல் தொகுதி என்னும் குறிப்புணர்த்தும். கமம் என்பது நிறைவாகிய குறிப்புணர்த் தும். எ-று. (உ-ம்) கருவிவானம் எனவும் கமஞ்சூல் மாமழை? எனவும் வரும். மின் இடி முதலாயவற்றின் தொகுதியாகிய மேகம் என்பார் கருவி வானம் என்ருர், கூடுகள். அரியே யைம்மை. ங்டுகள். கவவகத் திடுமே. (இ-ள்) அரி என்னுஞ்சொல் ஐம்மையாகிய குறிப்புணர்த் தும் கவவு என்பது அகத்திடுதலாகிய குறிப்புணர்த்தும். ஐம்மை-அழகுடைமை.