பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 (இ-ள்) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் என்னும் அந்நான்கு சொல்லேயுஞ் செய்யுளாகத் தொடுக் குங்கால் மெல்லொற்றை வவ்லொற்ருக்க வேண்டுமிடத்து வல்லொற்ருக்கலும், வல்லொற்றை மெல்லொற்ருக்க வேண்டு மிடத்து மெல்லொற்ருக்கலும், குறைவதனை விரிக்கவேண்டு மிடத்து விரித்தலும், மிகுவதனைத் தொகுக்க வேண்டுமிடத்துத் தொகுத்தலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்க வேண்டு மிடத்து நீட்டலும், நெட்டெழுத்தைக் குறுக்க வேண்டுமிடத் துக் குறுக்கலும் ஆகிய அறுவகை விகாரமும் செய்யுளின்பம் பெறச்செய்யும் சான்ருேர் அணிபெற நாட்டுதலே வலியாக வுடைய எ~று. நாட்டல்-நிலேபெறச் செய்தல். (உ-ம்) குறுந்தாட் கோழி எனற்பாலது, குறுத்தாட் கோழி’ என வருதல் வலிக்கும் வழி வலித்தல். குற்றியலுகரம்: என்பது குன்றியலுகரம் என வருதல் மெலிக்கும்வழி மெலித் தல். தண்டுறைவன் எனற்பாலது தண்ணந்துறைவன் என வருதல் விரிக்கும் வழி விரித்தல். மழவரை ஒட்டிய என உருபு விரிந்துவரற்பாலது மழவரோட்டிய' என வருதல் தொகுக்கும் வழித்தொகுத்தல். விடுமின் எனற்பாலது வீடுமின் என வருதல் நீட்டும் வழி நீட்டல். தீயேன்” எனற்பாலது 'தியேன்” என வருதல் குறுக்கும் வழிக்குறுக்கல். செய்யுள் விகாரமாகிய இவ்வாறினையும், 154. வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. எனவரும் சூத்திரத்தா ற் குறித்தார் நன்னூலார் . வலித்தல் முதல் தொகுத்தல் ஈருகச் சொல்லப்பட்ட ஆறும் செய்யுளகத்து அடிதொடை முதலிய நோக்கி அமைக்க வேண்டுமிடத்து வருவனவாம்?? என்பது இதன் பொருள் , சளச. நிரனிறை சுண் ணம் அடிமறி மொழிமாற் றவை நான் கென்ப மொழிபுண ரியல்பே. இது, செய்யுளகத்து மொழிபுணரியல்பாகிய பொருள் கோள் இவையெனக் கூறுகின்றது.