பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 'அல்வாறு வழி இயமையுஞ் செப்பாவன : உற்றதுரைத்தலும் உறுவது கூறலும் ஏவுதலும் என இவை என்பர் இளம்பூரணர். 'சாத்தா உறையூர்க்குச் செல்லாயோ?? என வினவிய வழி, 'காலின் முட்குத்திற்று; தலே நோகின்றது? என்றல் உற்ற துரைத்தல்; கடன் தந்தார் வனப்பர் பகைவர் எறிவர்? என்றல் உறுவது கூறல்; நீ செல்’ என்றல் ஏவுதல். இவை செவ்வன் இறை அல்லவேனும் வியை பொருளை ஒருவாற்ருன் அறிவுறுத்தலின் விடையாக அமைத்துக் கொள்ளப் பெற்றன. பிசு. செப்பினும் வினவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. இது, செப்புவாரொடு வினவுவாரிடைக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) செப்புமிடத்தும் வினவுமிடத்தும் சினேக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் உறழ்பொருளும் துணைப் பொருளும் அவ்வப் பொருளுக்கு அவ்வப் பொருளேயாம். எ-று, எனவே சினையும் முதலும் தம்முள் மயங்கிவருதல் வழு வென்பதாம் . உறழ் பொருளாவது ஒப்புமை கூருது ஒன்றின் மிக்கதாகக் கூறப்படுவது. துணைப் பொருளாவது, இதனைப் போல்வது இது என்ருங்கு இருபொருட்கும் ஒப்புமை கூறப் படுவது. (உ-ம்) இவள் கண்ணின் இவள் கண் பெரிய, நும் மரசரசனின் எம்மரசன் முறை செய்யும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ, எம்மரசனின் நும்மரசன் முறை செய்யுமோ என முறையே செப்பும் வினவும் உறழ் பொருளின் கண் சினையும் முதலும் மயங்காமல் வந்தன. இவள் கண் ஒக்கும் இவள் கண், எம்மரசனே ஒக்கும் நும்மரசன், இவள் கண் ஒக்குமோ இவள் கண், எம்மரசனை ஒக்குமோ நும்மரசன் என முறையே செப்பும் விவுைம் துணைப்பொருளின்கண் சினையும் முதலும் மயங்காமல் வந்தன.