பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429 (இ-ள்) முற்கூறிய மூன்றனுள், ஈயென்னுஞ்சொல் இரக் கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற்ருகும். தாவென்னுஞ் சொல் அவளுேடு ஒப்போன் கூற்ருகும். கொடு வென்னுஞ் சொல் அவனின் உயர்ந்தவன் கூற்ரும். எ-று. (உ-ம்) சோறு ஈ, ஆடை தா, சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையே இழிந்தோர், ஒப்போர், உயர்ந் தோர் ஆகிய மூவர்க்கும் உரியவாய் வந்தவாறு காண்க . இந்நான்கு சூத்திரப் பொருளேயும் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்தது, 406. ஈதா கொடுவெனு மூன்று முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை. என வரும் நன்னுாற் சூத்திரமாகும். சச.அ. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னேப் பிறன் போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத் தியலு மென் மனர் புலவர். இது, மேலதற்கோர் வழுவமைதி கூறுகின்றது . (இ-ஸ்) கொடு வென்னுஞ்சொல் முதனிலே வகையாற் புடர்க்கையாயினும், (இரப்பான்) தன்னைப் பிறனுெருவன் போலக் கூறுங்கருத்து வகையால் தன்னிடத்தே செல்லும். எ-று . தன்மைக்கும் முன்னிலேக்கும் உரிய தா? என்னும் சொல் விகுலோ அன்றி ஈ என்னுஞ் சொல்லினலோ இரப்போன் ஒன்றைத் தன்பொருட்டுக் கேட்டல் வேண்டும். உயர்ந்தோன் அங்ங்னந் தான் ஏற்பாகைச் சொல்லாது கொடு எனப் படர்க்கை வாய்பாட்டாற் கூறுவான். அந்நிலையில் தன்னையே பிறன் போலக் குறித்தானகலின் அந்நிலையில் அச்சொல் தன் னிடத்தேயாம் என இடவழுவமைத்தவாறு என்பர் சேை வரையர்.